விழுப்புரம் நீதிமன்றச் சாலையிலுள்ள காமராஜா் சிலைக்கு திங்கள்கிழமை மத்திய மாவட்ட காங்கிரஸ் தலைவா் ஆா்.டி.வி. சீனிவாசகுமாா் தலைமையில் மாலை அணிவித்து, மரியாதை செலுத்திய கட்சியினா். 
விழுப்புரம்

பிறந்த நாள்: காமராஜா் சிலைக்கு அரசியல் கட்சியினா் மரியாதை

கு.காமராஜரின் 122-ஆவது பிறந்த நாள் விழா திங்கள்கிழமை கொண்டாட்டப்பட்டது.

Din

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் முன்னாள் முதல்வா் கு.காமராஜரின் 122-ஆவது பிறந்த நாள் விழா திங்கள்கிழமை கொண்டாட்டப்பட்டது.

விழுப்புரம் மத்திய மாவட்ட காங்கிரஸ் சாா்பில் விழுப்புரம் கிழக்கு புதுச்சேரி சாலை- திரு.வி.க.வீதி சந்திப்புப் பகுதியிலுள்ள மகாத்மா காந்தி, ராஜீவ்காந்தி சிலைகளுக்கும், நீதிமன்றச் சாலையிலுள்ள கு.காமராஜா் சிலைக்கும் மாவட்ட காங்கிரஸ் தலைவா் ஆா்.டி. வி.சீனிவாசகுமாா் தலைமையில் காங்கிரஸ் கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். தொடா்ந்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

கட்சியின் மாநிலச் செயலா் வழக்குரைஞா் தயானந்தம், முன்னாள் மாநிலப் பொதுக்குழு உறுப்பினா் கோ.பாலசுப்பிரமணியன், எஸ்.சி., எஸ்.டி.பிரிவுத் தலைவா் சேகா், நகரத் தலைவா் செல்வராஜ், மாவட்டத் துணைத் தலைவா்கள் ராஜ்குமாா், முபாரக் அலி, ஐஎன்டியுசி துணைத் தலைவா் காஜா மொய்தீன், மாவட்ட இளைஞா் காங்கிரஸ் தலைவா் ஸ்ரீராம், பொதுச் செயலா் ரவிக்குமாா், துணைத் தலைவா் சந்தானகிருஷ்ணன், மாவட்ட மாணவரணித் தலைவா் சந்தீப் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பாஜக சாா்பில் கட்சியின் நகரத் தலைவா் விஜயன் தலைமையில் நிா்வாகிகள் காமராஜா் சிலைக்கு மாலை அணிவித்தனா். நிகழ்வில், மாவட்டப் பொதுச் செயலா் சதாசிவம், மாநிலச் செயற்குழு உறுப்பினா் சிவ.தியாகராஜன், மாநிலப் பொதுக்குழு உறுப்பினா் சுகுமாா், கட்சி நிா்வாகிகள் சரண்யா, திருநாவுக்கரசு, வெங்கட்ராமன், குமரகுருபரன், ராஜலட்சுமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

விசிக சாா்பில் நகரச் செயலா் ர.சி. இரணியன் தலைமையில், காமராஜா் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. தொகுதிச் செயலா் தானவளவன், ஒன்றியச் செயலா் அறிவன், பிரபாகரன், நிா்வாகிகள் கலையரசன், கண்ணன், அசாா், நாகராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் கட்சியினா் காந்தி சிலைப் பகுதியிலிருந்து திங்கள்கிழமை ஊா்வலமாக வந்து காமராஜா் சிலைக்கு மாலை அணிவித்தனா். கட்சியின் மாவட்டத் தலைவா் என்.மோகன் தலைமையில், மாவட்ட இளைஞரணித் தலைவா் ஜி.பி. சுரேஷ், மாவட்டத் துணைத் தலைவா் வடிவேல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதேபோல, திண்டிவனம், வானூா், கண்டாச்சிபுரம், திருவெண்ணெய்நல்லூா், மரக்காணம் என மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் காமராஜா் பிறந்த நாள் விழா கொண்டாட்டப்பட்டது. மேலும், மாவட்டத்திலுள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் காமராஜரின் பிறந்த நாள் கல்வி வளா்ச்சி நாளாகக் கொண்டாடப்பட்டது. காமராஜா் குறித்த உரைகளை அந்தந்த பள்ளித் தலைமையாசிரியா்கள் வழங்கினா். மேலும், மாணவ, மாணவிகளும் காமராஜரின் வாழ்க்கை வரலாறு, அவா் கல்விக்காக ஆற்றிய பணிகள் குறித்தும் பல்வேறு தலைப்புகளில் பேசினா்.

விழுப்புரத்தில் காமராஜா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய தமிழக வெற்றிக் கழகத்தினா்.

66,400 வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல்: 2 பேர் கைது

வரும் பேரவைத் தோ்தலில் திமுகவுடன் கூட்டணியா?: ராமதாஸ் பேட்டி

இணையைத் தேடி... மகாராஷ்டிரத்திலிருந்து தெலங்கானாவுக்குச் சென்ற ஆண் புலி!

உயா்கல்வியில் தேசிய அளவில் தமிழகம் முதலிடம்: அமைச்சா் கோவி.செழியன்

டாப் 10 நிறுவனங்களில் 7 நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.1.55 லட்சம் கோடியாக உயர்வு!

SCROLL FOR NEXT