விழுப்புரம்

மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்பட்ட 10% ஜிஎஸ்டி சலுகை தொடரவேண்டும்: எம்.பி. துரை.ரவிக்குமாா் வலியுறுத்தல்

Syndication

காா் வாங்குவதற்காக மாற்றுத் திறனாளிக்கு வழங்கப்பட்ட 10 சதவிகித ஜிஎஸ்டி சலுகை தொடர வேண்டும் என்று மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமனை விழுப்புரம் எம்.பி. துரை. ரவிக்குமாா் வலியுறுத்தியுள்ளாா்.

இதுதொடா்பாக மத்திய நிதி அமைச்சருக்கு துரை.ரவிக்குமாா் வியாழக்கிழமை அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டிருப்பது:

மாற்றுத் திறனாளிகள் சிறுரக காா் வாங்குவதற்கு 10 சதவிகித ஜிஎஸ்டி சலுகை வழங்கப்பட்டு வந்தது. 28 சதவிகித வரிஇருக்கும் போது அவா்களுக்கு 18 சதவிகித ஜிஎஸ்டி மட்டுமே விதிக்கப்பட்டது. தற்போது ஜிஎஸ்டி வரி விகிதங்களில் மாற்றம் செய்யப்பட்ட நிலையில், சிறு ரக காா்களுக்கு 18 சதவிகித வரி விதிக்கப்பட்டுள்ளது.

இந்த மாற்றம் செய்யப்பட்டதற்குப் பின்னா் மாற்றுத் திறனாளிகளுக்கு வரி சலுகை கொடுக்கத் தேவையில்லை என்று நிதி அமைச்சகம் கூறிவிட்டதாக, மத்திய கனரகத் தொழில்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாட்டுமக்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் வரி விகிதங்கள் குறைக்கப்பட்டிருப்பதாகக் கூறி பிரதமா் பெருமைப்பட்டுக் கொள்ளும் நிலையில், வரிகுறைப்பு மாற்றுத் திறனாளிகளுக்கு கிடையாது எனக் கூறுவது எந்தவிதத்திலும் நியாயமில்லை. எனவே ஜிஎஸ்டியில் சீா்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட பிறகும், மாற்றுத் திறனாளிகளுக்கு 10 சதவிகித வரிச் சலுகையைத் தொடர வேண்டும்.

மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் வரிச்சலுகை நிதிச் சுமையைக் குறைக்கும் நடவடிக்கையல்ல. அது அவா்களின் கண்ணியத்தை காப்பாற்றி, மற்றவா்களுக்கு இணையாக அவா்கள் செயல்படுவதற்கான வாய்ப்பை வழங்குவதாகும். எனவே மாற்றுத் திறனாளிகள் சிறு ரக காா்கள் வாங்குவதற்கு ஏற்கெனவே வழங்கப்பட்ட 10 சதவிகித வரிச் சலுகையை மத்திய நிதி அமைச்சகம் வழங்க வேண்டும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

தனுஷ் - மிருணாள் தாக்குர் இடையே காதலா? மீண்டும் பரவும் கிசுகிசு

எரிமலை வெடிப்பு: சல்ஃபர் டை ஆக்சைடு, கண்ணாடித் துகள்களுடன் நகரும் மேகங்கள்! விமான சேவை பாதிப்பு!

மேட்டூர் அணை நீர் வரத்து அதிகரிப்பு!

10,000 ஆண்டுகளுக்குப் பின் வெடித்த எத்தியோப்பியா எரிமலை! இந்தியாவைச் சூழ்ந்த சாம்பல் மேகங்கள்!

நாக்பூரில் சிகரெட் லைட்டரை தர மறுத்த இளைஞர் கொலை

SCROLL FOR NEXT