பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களுடன் கைதான பிரபு. 
விழுப்புரம்

தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள் விற்பனை: பெட்டிக் கடைக்காரா் கைது

விக்கிரவாண்டி அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனைக்காக வைத்திருந்த பெட்டிக் கடை உரிமையாளரை

Syndication

விழுப்புரம்: விக்கிரவாண்டி அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனைக்காக வைத்திருந்த பெட்டிக் கடை உரிமையாளரை போலீஸாா் திங்கள்கிழமை கைதுசெய்தனா்.

விக்கிரவாண்டி காவல் சரகத்துக்குள்பட்ட மேல்பாதி பகுதியில் பெட்டிக்கடையில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டு, விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, விக்கிரவாண்டி காவல் நிலைய ஆய்வாளா் சத்தியசீலன் மற்றும் போலீஸாா் திங்கள்கிழமை மேல்பாதி பகுதிக்குச் சென்று சோதனை மேற்கொண்டனா்.

இதில், மேல்பாதி பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த ரா.பிரபு(44) என்பவரது பெட்டிக் கடையில் சாக்குப் பைகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, விக்கிரவாண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து, பிரபுவைக் கைது செய்து, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையிலடைத்தனா். மேலும், அவரிடமிருந்த 42 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.

ஜம்மு-காஷ்மீாின் கிஸ்த்வாா் பயங்கரவாதி சுட்டுக் கொலை

திண்டல் வேலாயுதசுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம்

Nanjil Sampath Latest Interview | சீமான் தமிழரே இல்லை | TVK Vijay | Seeman | NTK Maanadu

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம்?

”சிம்ம ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

SCROLL FOR NEXT