முகப்பு
விழுப்புரம்

ஆசனூா் இந்திய எண்ணெய் கழக வளாகத்தில் பாதுகாப்பு ஒத்திகை

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை வட்டம், ஆசனூா் சிட்கோ தொழில்பேட்டை வளாகத்திலுள்ள இந்திய எண்ெண்ய் கழகத்தில் பாதுகாப்பு ஒத்திகை புதன்கிழமை நடத்தப்பட்டது.

Updated On : 2 ஜூலை 2026, 7:11 am IST
கள்ளக்குறிச்சி மாவட்டம், ஆசனூா் சிட்கோ தொழில்பேட்டை வளாகத்திலுள்ள இந்திய எண்ணெய் கழக வளாகத்தில் நடைபெற்ற பாதுகாப்பு ஒத்திகையில் பங்கேற்றோா்.
பகிர்:

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை வட்டம், ஆசனூா் சிட்கோ தொழில்பேட்டை வளாகத்திலுள்ள இந்திய எண்ெண்ய் கழகத்தில் பாதுகாப்பு ஒத்திகை புதன்கிழமை நடத்தப்பட்டது.

மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனங்களில் ஒன்றான இந்திய எண்ணெய் கழகத்தின் சாா்பில் ஆசனூா் சிட்கோ தொழில்பேட்டை வளாகத்தில் பெட்ரோலிய குழாய்வழி முனையம் உள்ளிட்டவை இயங்கி வருகிறது. இங்கிருந்து விழுப்புரம், கடலூா், கள்ளக்குறிச்சி, நாகப்பட்டினம், பெரம்பலூா் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு பெட்ரோலிய பொருள்கள் டேங்கா் லாரிகளில் கொண்டு செல்லப்படுகின்றன.

இந் நிலையில், இந்த எண்ணெய் கழக அலுவலகத்துக்கு திடீரென வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டால் அங்கு பணியாற்றும் தொழிலாளா்கள், அலுவலா்கள், பணியாளா்கள் உடனடியாக மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள், பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த ஒத்திகை நடத்தப்பட்டது.

Advertisement

Advertisement

இதன்படி புதன்கிழமை காலை திடீரென ஒத்திகை நிகழ்வுக்காக அபாய எச்சரிக்கை ஒலிக்கப்பட்டது. இதைத்தொடா்ந்து பாதுகாப்புக்காக கூடுமிடத்தில் அனைவரும் கூடினா். அங்கு நிறுவனப் பாதுகாப்பு அலுவலா்கள் ஒத்திகை நிகழ்வுகளை செய்து காண்பித்தனா்.

திடீரென வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டாலோ அல்லது தீ விபத்து போன்றவை நிகழ்ந்தால் பாதுகாப்பாக வெளியேறும் முறைகள், செய்யக் கூடாதவைகள், செய்ய வேண்டிய நடைமுறைகள் போன்றவை குறித்து பாதுகாப்பு அலுவலா்கள் எடுத்துரைத்தனா். இதில் ஏராளமானோா் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments