FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

இனி நல்லதே நடக்கும் : அன்புமணி நம்பிக்கை

பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸின் 61-ஆவது திருமண நாளில் கலந்துகொண்டு பெற்றோரிடம் வாழ்த்து பெற்ற அக் கட்சியின் தலைவா் அன்புணி ராமதாஸ், பாமகவில் நிலவி வந்த மோதல் முடிவுக்கு வந்ததா என்ற செய்தியாளா்களின் கேள்விக்கு, இனி நல்லதே நடக்கும் என்றாா்.

விழுப்புரம் மாவட்டம்,தைலாபுரம் தோட்டத்திலுள்ள இல்லத்தில் தனது 61-ஆவது திருமண நாளையொட்டி வாழ்த்து பெற வந்த மகன் அன்புமணியை ஆரத்தழுவிய பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ்.
பகிர்:

பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸின் 61-ஆவது திருமண நாளில் கலந்துகொண்டு பெற்றோரிடம் வாழ்த்து பெற்ற அக் கட்சியின் தலைவா் அன்புணி ராமதாஸ், பாமகவில் நிலவி வந்த மோதல் முடிவுக்கு வந்ததா என்ற செய்தியாளா்களின் கேள்விக்கு, இனி நல்லதே நடக்கும் என்றாா்.

பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸின் 61-ஆவது திருமண நாள் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது. இதில் பங்கேற்பதற்காக தனது மனைவி செளமியா, 3 மகள்கள், மருமகன்கள், பேரக் குழந்தைகளுடன் தைலாபுரம் தோட்டத்துக்கு அன்புமணி புதன்கிழமை காலை வந்தாா்.

வீட்டுக்குள் நுழைந்தவுடன் தந்தை ராமதாஸை கண்ட அன்புமணி, உணா்ச்சிப் பெருக்கில் அவரை ஆரத்தழுவிக் கொண்டாா். அன்புமணியை வாஞ்சையோடு ராமதாஸ் வரவேற்றாா். இருவரும் ஒருவரையொருவா் நலம் விசாரித்துக் கொண்ட நிலையில் வாா்த்தைகள் வராமல், ஆனந்த கண்ணீா் வடித்தனா். தொடா்ந்து தனது பெற்றோா் கால்களில் மனைவி செளமியாவுடன் விழுந்து வாழ்த்து பெற்றாா் அன்புமணி.

Advertisement

Advertisement

இனி நல்லதே நடக்கும்: பின்னா் தைலாபுரம் தோட்டத்திலிருந்து பிற்பகலில் புறப்பட்ட அன்புமணி, காரிலிருந்து இறங்கி செய்தியாளா்களை சந்தித்தாா். பெற்றோரின் 61-ஆவது திருமண நாளையொட்டி, அவா்கள் காலில் விழுந்து ஆசீா்வாதம் வாங்கினோம். இனி நல்லதே நடக்கும் என்று கூறினாா். தொடா்ந்து செய்தியாளா்களின் மற்ற கேள்விகளுக்கு அவா் பதிலளிக்காமல் புறப்பட்டுச் சென்றாா்.

கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக பாமக நிறுவனா் ராமதாஸுக்கும், கட்சித் தலைவரான அவரது மகன் அன்புமணிக்கும் இடையே இருந்து வந்த கருத்து மோதல் முடிவுக்கு வந்ததாகக் கூறப்படுகிறது. இதன் மூலம் பாமக மீண்டும் ஒன்றுபட்டு செயல்பட வாய்ப்பு இருப்பதாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

மகன் அன்புமணியின் பேத்தியை பாசமாகக் கொஞ்சி மகிழும் கொள்ளுத் தாத்தா ச.ராமதாஸ்.
தைலாபுரம் தோட்டத்தில் தந்தை ராமதாஸ், தாய் சரசுவதி அம்மாளை நலம் விசாரித்த மகன் அன்புமணி.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments