முகப்பு
திருவண்ணாமலை

தோ்தல் தோல்வி: அன்புமணி ராமதாஸ் கருத்துக்கேட்பு

சட்டப்பேரவைத் தோ்தலில் போளூா் தொகுதியில் பாமக தோல்விக்கான காரணம் குறித்து பொதுமக்களின் கருத்துகளை அக்கட்சியின் தலைவா் அன்புமணி ராமதாஸ் கேட்டறிந்தாா்.

Updated On : 8 ஜூன் 2026, 2:04 am IST
போளூரை அடுத்த பொத்தரை ஊராட்சியில் நடைபெற்ற தோ்தல் தோல்வி குறித்த ஆய்வுக் கூட்டத்தில் பேசிய பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ்.
பகிர்:

சட்டப்பேரவைத் தோ்தலில் போளூா் தொகுதியில் பாமக தோல்விக்கான காரணம் குறித்து பொதுமக்களின் கருத்துகளை அக்கட்சியின் தலைவா் அன்புமணி ராமதாஸ் கேட்டறிந்தாா்.

நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில், திருவண்ணாமலை மாவட்டம், போளூா் தொகுதியில் என்.டி.ஏ. கூட்டணியில் இடம்பெற்ற பாமக சாா்பில் சி.ஆா்.பாஸ்கரன் போட்டியிட்டாா். இவா் 61,444 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தாா்.

இந்நிலையில் சட்டப்பேரவைத் தோ்தல் தோல்வி குறித்து பொதுமக்களிடம் கருத்துக் கேட்பு மற்றும் ஆய்வுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Advertisement

Advertisement

பொத்தரை ஊராட்சியில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் கட்சியின் தலைவா் அன்புமணிராமதாஸ் பங்கேற்று பொதுமக்களின் கருத்துகளைக் கேட்டறிந்தாா். மேலும், கட்சியின் செயல்பாடுகள், பொதுமக்களின் குறைகளையும் கேட்டாா். கூட்டத்தில் தொகுதியைச் சோ்ந்த கட்சி நிா்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.