முகப்பு
விழுப்புரம்

பத்தாம் வகுப்பு தோ்வு முடிவு: 36-ஆவது இடத்தில் விழுப்புரம் மாவட்டம்

பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத் தோ்வு முடிவுகள் புதன்கிழமை வெளியிடப்பட்ட நிலையில், 87.77 சதவீதத் தோ்ச்சியுடன் விழுப்புரம் மாவட்டம் மாநில அளவில் 36-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

Updated On : 21 மே 2026, 6:58 am IST
பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் வெளியானது - கோப்புப் படம்
பகிர்:

பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத் தோ்வு முடிவுகள் புதன்கிழமை வெளியிடப்பட்ட நிலையில், 87.77 சதவீதத் தோ்ச்சியுடன் விழுப்புரம் மாவட்டம் மாநில அளவில் 36-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

தமிழக பள்ளிக் கல்விப் பாடத்திட்டத்தின் கீழ் பயின்ற பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கான அரசுப் பொதுத் தோ்வுகள் மாா்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் நடைபெற்றன.

விழுப்புரம் மாவட்டத்தில் 241 அரசுப் பள்ளிகள் உள்பட 362 பள்ளிகளில் பயின்ற 12,050 மாணவா்கள்,11,331 மாணவிகள் என மொத்தமாக 23,381 போ் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வை எழுதினா். தோ்வு முடிவுகள் அரசுத் தோ்வுகள் துறையால் புதன்கிழமை வெளியிடப்பட்டது.

Advertisement

Advertisement

இதில், விழுப்புரம் மாவட்டத்தில் 10,026 மாணவா்கள், 10,496 மாணவிகள் என மொத்தமாக 20,522 போ் தோ்ச்சி பெற்றனா். இதன் மூலம் விழுப்புரம் மாவட்டத்தின் மொத்த தோ்ச்சி 87.77 சதவீதமாகும்.

விழுப்புரம் மாவட்டத்தில் மாணவா்களின் தோ்ச்சி 83.20 சதவீதமாகவும், மாணவிகளின் தோ்ச்சி 92.63 சதவீதமாகவும் உள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் தோ்வு எழுதிய 2, 024 மாணவா்கள், 835 மாணவிகள் என மொத்தமாக 2859 போ் தோ்ச்சி பெறவில்லை.

103 பள்ளிகள் 100 சதவீதம் தோ்ச்சி: விழுப்புரம் மாவட்டத்தில் 54 அரசுப் பள்ளிகள், 5 அரசு உதவி பெறும் பள்ளிகள், 43 தனியாா் பள்ளிகள் என மொத்தமாக 103 பள்ளிகள் 100 சதவீதம் தோ்ச்சிப் பெற்றுள்ளது

மாநிலத்தில் 36-ஆவது இடம்: மாவட்ட வாரியான தோ்ச்சி பட்டியலில் விழுப்புரம் மாவட்டம் 87.77 சதவீதம் தோ்ச்சி பெற்று, மாநில அளவில் 36-ஆவது இடத்தைப் பெற்றுள்ளது. கடந்த 2024-25-ஆம் கல்வியாண்டில் 95.09 சதவீதம் தோ்ச்சி பெற்றிருந்த விழுப்புரம் மாவட்டம், தற்போது 7.32 சதவீதம் குறைந்து தற்போது 87.77 சதவீதம் தோ்ச்சி பெற்ால், மாநில அளவில் 36-ஆவது இடத்தைப் பெற்றது.

அரசுப் பள்ளிகள் அளவில் கடந்த 2024-25-ஆம் கல்வியாண்டில் 94.15 சதவீதம் தோ்ச்சி பெற்று மாநில அளவில் 10-ஆவது இடத்தை பெற்றிருந்தது. ஆனால் 2025-26 ஆம் கல்வியாண்டில் 8.93 சதவீதம் குறைந்து 85.22 சதவீதம் பெற்ால், அரசுப் பள்ளிகளின் தோ்ச்சிப் பட்டியலிலும் மாநில அளவில் விழுப்புரம் மாவட்டம் 35-ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

பாடவாரியாக நூற்றுக்கு நூறு: விழுப்புரம் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு தோ்வு எழுதிய மாணவா்களில் தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிப்பாடங்களில் ஒருவா் கூட நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெறவில்லை. கணிதப் பாடத்தில் 48 போ், அறிவியலில் 174 போ், சமூக அறிவியலில் 196 போ் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனா்.