நவம்பர் மாதப் பலன்கள் - ரிஷபம்
எப்படி இருக்கப்போகிறது இந்த மாதம்..
ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதம், ரோகிணி, மிருகசிரீஷம் 1, 2, பாதம்)
கிரகநிலை:
தைரிய வீர்ய ஸ்தானத்தில் குரு - சுக ஸ்தானத்தில் கேது - பஞ்சம ஸ்தானத்தில் சுக்கிரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சூரியன், புதன் (வ) - சப்தம ஸ்தானத்தில் செவ்வாய் - தொழில் ஸ்தானத்தில் சனி (வ), ராஹூ என கிரக நிலைகள் உள்ளன.
Advertisement
கிரகமாற்றம்:
03.11.2025 அன்று பஞசம ஸ்தானத்தில் இருந்து சுக்கிரன் பகவான் ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
16.11.2025 அன்று ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து சூரியன் களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
17.11.2025 அன்று ரண ருண ரோக ஸ்தானத்தில் புதன் பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார்.
17.11.2025 அன்று தொழில் ஸ்தானத்தில் சனி பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார்.
27.11.2025 அன்று ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து சுக்கிரன் பகவான் களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்:
இந்த மாதம் உழைப்பினால் வெற்றி அடைவீர்கள். வீண்செலவு ஏற்பட்டாலும் அதை சமாளிக்கும் விதத்தில் வரவும் இருக்கும். பயணங்கள் மூலம் அலைச்சல் அதிருப்தி உண்டாகலாம். கனவுகளால் தொல்லை ஏற்படலாம். சரியான நேரத்தில் தூங்க முடியாத சூழ்நிலை உருவாகும். உஷ்ண சம்பந்தமான நோய் உண்டாகலாம். தொழில் வியாபாரத்தில் பணத்தேவை ஏற்படலாம். கடன் விவகாரங்களில் கவனமாக செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஓய்வு இல்லாமல் பணியாற்ற வேண்டி இருக்கும். இயந்திரம், நெருப்பு, ஆயுதத்தை பயன்படுத்துவோர் மிகவும் கவனமாக இருப்பது அவசியம். குடும்பத்தில் தேவையற்ற பிரச்சனைகள் உருவாகலாம். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டாலும் சரியாகி விடும். வீடு, வாகனம் தொடர்பான செலவுகள் உண்டாகலாம். பிள்ளைகளுக்காக கூடுதல் செலவு செய்ய வேண்டி இருக்கும். உறவினர்களிடம் கவனம் தேவை. பெண்களுக்கு மற்றவர்களின் வேலைகளுக்காக அலைய நேரிடும். மாணவர்களுக்கு கல்வியை தவிர மற்றவைகளில் கவனத்தை சிதற விடலாம். வாகனங்களில் செல்லும் போதும் எச்சரிக்கையாக செல்வது நல்லது.
கார்த்திகை 2, 3, 4 பாதம்:
இந்த மாதம் குடும்பத்தில் ஏதாவது பிரச்சனை தலைதூக்கும். கணவன், மனைவிக்கிடையே வாக்குவாதங்கள் உண்டாகலாம். பிள்ளைகளை அவர்கள் போக்கிலேயே விட்டுபிடிப்பது நல்லது. வாக்குவாதங்களை தவிர்ப்பது நன்மைதரும். எடுத்த காரியங்களை செய்து முடிப்பது பற்றிய மனசஞ்சலம் ஏற்பட்டு நீங்கும்.
ரோகிணி:
இந்த மாதம் முன்னேற்றம் காண கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். குழப்பம் நீங்கி மனநிம்மதி கிடைக்கும். சொத்து பிரச்சனை தீரும். செயல்திறன் மூலம் பாராட்டு கிடைக்கும். வாழ்க்கையில் திடீர் திருப்பங்கள் ஏற்படலாம். தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும்.
மிருக சிரீஷம் 1, 2, பாதம்:
இந்த மாதம் உடல்நலபாதிப்பு உண்டாகலாம். உஷ்ண சம்பந்தமான நோய் வரலாம் பண பற்றாக்குறை ஏற்படலாம். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் கூடுதலான லாபம் கிடைக்க பாடுபடுவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அரசு அதிகாரிகள் மற்றும் உயர் அதிகாரிகளிடம் கவனமாக நடந்து கொள்வது நன்மை தரும்.
பரிகாரம்: ஆண்டாள் தாயாரை வணங்குவது.
சந்திராஷ்டம தினங்கள்: நவம் 23, 24
அதிர்ஷ்ட தினங்கள்: நவம் 05, 06