நவம்பர் மாதப் பலன்கள் - மிதுனம்
எப்படி இருக்கப்போகிறது இந்த மாதம்..
மிதுனம் (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதம்)
கிரகநிலை:
தனவாக்கு குரு - தைரிய வீரிய ஸ்தானத்தில் கேது - சுக ஸ்தானத்தில் சுக்கிரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சூரியன், புதன் (வ) - பாக்கிய ஸ்தானத்தில் சனி (வ), ராஹூ என கிரக நிலைகள் உள்ளன.
Advertisement
கிரகமாற்றம்:
03.11.2025 அன்று சுக ஸ்தானத்தில் இருந்து சுக்கிரன் பகவான் பஞசம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
16.11.2025 அன்று பஞசம ஸ்தானத்தில் இருந்து சூரியன் ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
17.11.2025 அன்று பஞசம ஸ்தானத்தில் புதன் பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார்.
17.11.2025 அன்று பாக்கிய ஸ்தானத்தில் சனி பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார்.
27.11.2025 அன்று பஞசம ஸ்தானத்தில் இருந்து சுக்கிரன் பகவான் ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்:
இந்த மாதம் எல்லாவற்றிலும் சாதகமான பலன் கிடைக்கும். பொருளாதார முன்னேற்றம் பணவரவில் திருப்தி ஆகியவை இருக்கும். எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். உடல் ஆரோக்கியம் உண்டாகும். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். தொழில் வியாபாரத்தில் இருந்த தொய்வு நீங்கி வேகம் பிடிக்கும். எதிர்பார்த்த ஆர்டர் கிடைக்கும். லாபம் கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் செயல்திறன் அதிகரிக்கும். மேல் அதிகாரிகளின் பாராட்டும், பதவி உயர்வும் கிடைக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை உண்டாகும். பிள்ளைகள் மூலம் பெருமை ஏற்படும். உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் உண்டாகும். திருமணம் தொடர்பான பேச்சுகள் சாதகமாக முடியும். வீடு, வாகனம் வாங்குவது அல்லது புதுப்பிப்பதில் நாட்டம் அதிகரிக்கும். பெண்களுக்கு எடுத்த காரியத்தை திறமையாக செய்து முடிப்பீர்கள். மாணவர்களுக்கு கல்வி பற்றிய கவலை நீங்கும். பாடங்கள் படிப்பதில் வேகம் காட்டுவீர்கள். பாராட்டு கிடைக்கலாம்.
மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள்:
இந்த மாதம் புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்கள் அலைய வேண்டி இருக்கலாம். குடும்பத்தில் கூடுதல் செலவு உண்டாகும். வாழ்க்கை துணையின் உடல் நலத்தில் கவனம் தேவை. பிள்ளைகளின் நலனுக்காக பாடுபட வேண்டியிருக்கும். கணவன் மனைவிக்கிடையே கோபமான வார்த்தைகளை தவிர்ப்பது நல்லது.
திருவாதிரை:
இந்த மாதம் பணதேவை உண்டாகும். செயல்திறன் வெளிப்படும். புதிய முயற்சிகள் அலைச்சலை தரும். வெளிநாடு சம்பந்தமான பணிகளுக்கு செலவு செய்ய வேண்டி இருக்கும். அலுவலகத்தில் உங்கள் திறமை வெளிப்படும். மேலதிகாரிகள் வழிகாட்டுதல்படி நடப்பது நன்மைதரும்.
புனர்பூசம் 1, 2, 3 பாதம்:
இந்த மாதம் எல்லா காரியங்களும் நன்மையாக நடக்கும். மனதிருப்தி கிடைக்கும். மனகுழப்பம் நீங்கி தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள். மற்றவர்களிடம் கெட்ட பெயர் வாங்க நேரலாம். பொருள்களை கவனமாக பாதுகாத்துக் கொள்வது நல்லது.
பரிகாரம்: நரசிம்ம பெருமாளை வணங்குவது.
சந்திராஷ்டம தினங்கள்: நவம் 25, 26, 27
அதிர்ஷ்ட தினங்கள்: நவம் 07, 08