மாதப் பலன்கள்

நவம்பர் மாதப் பலன்கள் - தனுசு

எப்படி இருக்கப்போகிறது இந்த மாதம்..

ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன்

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)

கிரகநிலை:

தைரிய வீரிய ஸ்தானத்தில் சனி (வ), ராஹூ - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் குரு - பாக்கிய ஸ்தானத்தில் கேது - தொழில் ஸ்தானத்தில் சுக்கிரன் - லாப ஸ்தானத்தில் சூரியன், புதன் (வ)  - விரைய ஸ்தானத்தில் செவ்வாய் என கிரக நிலைகள் உள்ளன.

கிரகமாற்றம்:

03.11.2025  அன்று  தொழில்  ஸ்தானத்தில்  இருந்து  சுக்கிரன்  பகவான்   லாப  ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.

16.11.2025 அன்று லாப  ஸ்தானத்தில்  இருந்து  சூரியன் அயன சயன போக  ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.

17.11.2025 அன்று லாப  ஸ்தானத்தில் புதன் பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார்.

17.11.2025 அன்று தைரிய வீரிய  ஸ்தானத்தில்  சனி பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார்.

27.11.2025 அன்று  லாப  ஸ்தானத்தில்  இருந்து  சுக்கிரன்  பகவான்   அயன சயன போக  ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.

பலன்:

இந்த மாதம் மற்றவர்கள் ஒப்படைத்த வேலையை பொறுப்போடு செய்து முடிப்பீர்கள். மன சஞ்சலம் ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களிடம் அனுசரித்து செல்வதன் மூலம் வீண் பிரச்சனை வராமல் தடுக்கலாம். சிறிய விஷயத்துக்கு கூட கோபம் வரலாம். கட்டுப்படுத்துவது நன்மை தரும். திடீர் பண தேவை உண்டாகலாம். தொழில் வியாபாரம் தொடர்பான வீண் அலைச்சல் ஏற்படும். வாடிக்கையாளர்களிடம் நிதானமாக பேசுவது நல்லது. எதிர்பார்த்த பணம் கைக்கு வருவதில் தாமதம் ஏற்படலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நிர்வாகம் பற்றி யாருடனும் விமர்சனம் செய்யாமல் இருப்பது நல்லது. பதவி உயர்வு, சம்பள உயர்வு தாமதப்படலாம். குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்பாடுகள் உங்களுக்கு டென்ஷன் தருவதாக இருக்கலாம். கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் நல்ல பலன் தரும். பிள்ளைகளிடம் அனுசரித்து செல்வதும் அவர்கள் போக்கில் விட்டு பிடிப்பதும் நல்லது. பெண்களுக்கு கோபத்தை கட்டுப்படுத்துவது நன்மை தரும். மாணவர்களுக்கு சக மாணவர்களை அனுசரித்து செல்வது நன்மை தரும். மிகவும் பொறுமையுடனும், கவனமாகவும் பாடங்களை படிப்பது அவசியம்.

 மூலம்:

இந்த மாதம்  முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பணவரத்து எதிர்பார்த்த படி இருக்கும்.   உங்களது பேச்சை  மற்றவர்கள்  தவறாக புரிந்து கொள்வார்கள்.  எந்த ஒரு காரியமும் இழுப்பறியாக இருந்து  முடிவில் சாதகமான பலன்தரும்.  

பூராடம்:

இந்த மாதம்  வீட்டை விட்டு வெளியில் தங்க நேரலாம். தொழில் வியாபாரம் திருப்திகரமாக நடக்கும். கடன் பிரச்சனைகள் கட்டுக்குள் இருக்கும். சரக்குகளை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர் களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும்.

உத்திராடம் 1ம் பாதம்:

இந்த மாதம்  குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். ஆனால் மனதில் குடும்ப கவலை உண்டாகும். கணவன் மனைவிக் கிடையே  இருந்த மனவருத்தம் நீங்கும். பிள்ளைகள் உங்களது பேச்சை கேட்டு நடப்பது திருப்தி தரும்.

பரிகாரம்: நாகதேவதையை வணங்குவது.

சந்திராஷ்டம தினங்கள்: நவம் 11, 12

அதிர்ஷ்ட தினங்கள்: நவம் 20, 21, 22

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review

மின்சாரத் தேவையைத் தொடர்ந்து நிலக்கரித் தேவை அதிகரிக்கும்!

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies

இந்திய அணிக்கு இதுதான் சரியான பிளேயிங் லெவன் | T20 World Cup Review

தோ்தல் வந்துவிட்டால் பாஜக 'சோதனை' என்று சிபிஐயை பயன்படுத்தும்: கனிமொழி எம்.பி.

SCROLL FOR NEXT