வார பலன்கள் - ரிஷபம்
எப்படி இருக்கப்போகிறது இந்த வாரம்..
தொழிலில் புதிய இலக்குகளை நிர்ணயித்துக் கொண்டு செயலாற்றுவீர்கள். சிக்கனமாக இருந்து சேமிப்புகளைக் கூட்டிக் கொள்வீர்கள். அரசு விஷயங்களில் இருந்த தாமதம் விலகும்.
உத்தியோகஸ்தர்கள் அலுவலகச் சூழ்நிலை அறிந்து செயல்படுவீர்கள். வியாபாரிகள் புதிய முறையில் கடையை அலங்கரிப்பீர்கள். விவசாயிகளுக்கு மகசூல் நன்றாக இருக்கும்.
அரசியல்வாதிகளின் மீதான வதந்திகள் மறையும். கலைத்துறையினர் பிறருக்கு உதவி செய்து மகிழ்வீர்கள். பெண்கள் யோகா, பிராணாயாமம் போன்றவற்றைக் கற்றுக் கொள்வீர்கள். மாணவர்கள் உடற்பயிற்சியில் தவறாது ஈடுபடுவீர்கள்.
Advertisement
சந்திராஷ்டமம் - டிசம்பர் 20, 21