வார பலன்கள் - விருச்சிகம்
எப்படி இருக்கப்போகிறது இந்த வாரம்..
உங்கள் காரியங்களில் திட்டமிட்டுச் செயல்படுவீர்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு உண்டாகும்.
உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். வியாபாரிகளின் பழைய கடன்கள் வசூல் ஆகும். விவசாயிகள் கால்நடை, பால் வியாபாரத்தில் நன்மை அடைவீர்கள்.
அரசியல்வாதிகள் கட்சி மேலிடத்தின் கட்டளைகளை உடனுக்குடன் நிறைவேற்றுவீர்கள். கலைத்துறையினருக்கு சக கலைஞர்களால் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பெண்கள் யோகா, தியானம் போன்றவற்றைச் செய்வீர்கள். மாணவர்கள் உள்ளரங்கு விளையாட்டுகளில் வெற்றி பெறுவீர்கள்.
Advertisement
சந்திராஷ்டமம் - இல்லை.