வார பலன்கள் - மீனம்
தொழிலில் புதிய நுணுக்கங்களைப் புரிந்துகொள்வீர்கள். தன்னம்பிக்கையும் தனித்திறமையும் உயரும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும்.
உத்தியோகஸ்தர்கள் புதிய கடன்களைப் பெறுவீர்கள். வியாபாரிகளுக்கு சிரமங்கள் குறையும். விவசாயிகள் நீர்ப்பாசன வசதிகளில் கவனம் செலுத்துவீர்கள்.
அரசியல்வாதிகள் புதிய பதவிகளைப் பெறுவீர்கள். கலைத் துறையினரின் முயற்சிகள் வெற்றி பெறும். பெண்கள் ஆடை, அணிகலன்களை வாங்குவீர்கள். மாணவர்கள் வெளிவிளையாட்டுகளில் வெற்றி பெறுவீர்கள்.
Advertisement
சந்திராஷ்டமம் - ஜூன் 7,8.