வார பலன்கள் - மீனம்
எப்படி இருக்கப்போகிறது இந்த வாரம்..
பேச்சில் நன்மதிப்பைக் கூட்டுவீர்கள். தொழிலில் சிறு முதலீடுகளைச் செய்வீர்கள். இல்லத்துக்கு நவீன உபகரணங்களை வாங்குவீர்கள்.
உத்தியோகஸ்தர்கள் தன்னம்பிக்கையுடன் இருப்பீர்கள். வியாபாரிகளுக்கு கடன் பிரச்னைகள் குறையும். விவசாயிகள் சாதுர்யமான பேச்சால் பிறர் ஆதரவைப் பெறுவீர்கள்.
அரசியல்வாதிகள் புதிய அனுபவங்களைப் பெறுவீர்கள். கலைத் துறையினர் சாதனைகளைப் படைப்பீர்கள். பெண்கள் கணவருடன் அனுசரித்து நடப்பீர்கள். மாணவர்கள் வெளிவிளையாட்டுகளில் வெற்றி பெறுவீர்கள்.
Advertisement
சந்திராஷ்டமம் - இல்லை.