வார பலன்கள் - மிதுனம்
எப்படி இருக்கப்போகிறது இந்த வாரம்..
Updated On : 7 மார்ச், 2026 at 3:44 PM
உற்றார் உறவினர்கள், நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். கடினமான செயல்களையும் செய்து முடிப்பீர்கள்.
உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களை மதித்து நடப்பீர்கள். வியாபாரிகள் சிறிய முதலீடுகளைச் செய்து வியாபாரத்தைப் பெருக்குவீர்கள். விவசாயிகள் சக விவசாயிகளுக்கு உதவிகரமாக இருப்பீர்கள்.
அரசியல்வாதிகளுக்கு எதிரிகளின் பலம் குறையும். கலைத்துறையினரின் முயற்சிகளுக்கு மக்களின் ஆதரவு பெருகும்.
Advertisement
பெண்கள் குடும்பத்தில் சுப காரியங்களை நடத்தி மகிழ்வீர்கள். மாணவர்கள் பெற்றோரை மதித்து நடப்பீர்கள்.
சந்திராஷ்டமம் - ஏப்ரல் 11, 12.