வார பலன்கள் - மீனம்
எப்படி இருக்கப்போகிறது இந்த வாரம்..
குடும்பத்தில் மருத்துவச் செலவுகள் குறையும். வழக்குகளில் எதிர்பார்த்த திருப்பங்கள் உண்டாகும்.
உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களிடமிருந்து வேலைகளைக் கற்றுக் கொள்வீர்கள். வியாபாரிகளுக்குக் கொடுக்கல் வாங்கலில் அனுகூலங்கள் உண்டாகும். விவசாயிகள் புதிய குத்தகைகளை நாடிச் செல்வீர்கள்.
அரசியல்வாதிகள் கட்சி பிரச்னைகளுக்கு நேரம் ஒதுக்கிவீர்கள். கலைத்துறையில் வளர்ச்சியைக் காண்பீர்கள். பெண்களின் ஒதுங்கியிருந்த உறவினர்கள் மறுபடியும் குடும்பத்துடன் இணைவார்கள். மாணவர்கள் புதிய பயிற்சிகளை மேற்கொள்வீர்கள்.
சந்திராஷ்டமம் - பிப்ரவரி 8, 9.