வார பலன்கள் - மகரம்
எப்படி இருக்கப்போகிறது இந்த வாரம்..
உங்கள் தனித்துவம் வெளிப்படும். வருமானம் சிறப்பாக இருக்கும். புதிய பொறுப்புகளில் ஆர்வத்துடன் பணியாற்றுவீர்கள்.
உத்தியோகஸ்தர்களுக்கு ஊதிய உயர்வுடன் போனஸýம் கிடைக்கும்.
வியாபாரிகள் பழைய கடன்களை வசூலிப்பீர்கள்.
விவசாயிகளுக்கு கை நழுவிப்போன குத்தகைகள் திரும்பக் கிடைக்கும்.
அரசியல்வாதிகளின் எண்ணங்கள் பூர்த்தியாகும்.
கலைத்துறையினர் ரசிகர் மன்றங்களுக்குச் சற்று கூடுதல் செலவு செய்வீர்கள். பெண்கள் யோகா, தியானம் போன்றவற்றைக் கற்றுக் கொள்வீர்கள்.
மாணவர்கள் நண்பர்களுடன் இணக்கமாகப் பழகுவீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.