வார பலன்கள் - துலாம்
எப்படி இருக்கப்போகிறது இந்த வாரம்..
தொழிலில் புதிய நுட்பங்களைக் கற்பீர்கள். உங்கள் புத்திசாலித்தனம் கூடும். பேச்சில் கண்ணியம் காப்பீர்கள்.
உத்தியோகஸ்தர்கள் மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி தெளிவாக இருந்து பணியாற்றுவீர்கள். வியாபாரிகளுக்குக் கொடுக்கல் வாங்கல் சீராக நடந்தேறும். விவசாயிகளின் தன்னம்பிக்கை பலப்படும்.
அரசியல்வாதிகள் கட்சி மேலிடத்தின் கவனத்தைக் கவருவீர்கள். கலைத்துறையினரின் செயல்பாடுகள் சீரிய முறையில் இருக்கும். பெண்களுக்கு ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். மாணவர்கள் படிப்பில் முழு ஈடுபாட்டைக் காட்டுவீர்கள்.
சந்திராஷ்டமம் - மார்ச் 23, 24.