வார பலன்கள் (மே 1 - 7) - கன்னி
எப்படி இருக்கப்போகிறது இந்த வாரம்..
வருமானம் சீராக இருக்கும். அதே நேரம் எதிர்பாராத செலவுகளால் சேமிப்புகள் குறையும்.
உத்தியோகஸ்தர்கள் இழுபறியான வேலைகளை வெற்றிகரமாகச் செய்து முடித்து விடுவீர்கள். வியாபாரிகள் கொடுக்கல் வாங்கலில் சராசரியாக இருப்பீர்கள்.
விவசாயிகளுக்கு பால் வியாபாரத்தால் பணவரவு கூடும்.
Advertisement
அரசியல்வாதிகள் தொண்டர்களின் ஆதரவை முழுமையாகப் பெறுவீர்கள். கலைத்துறையினர் சக கலைஞர்களுக்கு உதவிகரமாக இருப்பீர்கள்.
பெண்கள் கணவரின் பாசம், அன்பைப் பெறுவீர்கள். மாணவர்கள் படிப்பில் சாதனை படைப்பீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.