வார பலன்கள் (மே 22 - 28) - கும்பம்
எப்படி இருக்கப்போகிறது இந்த வாரம்..
குடும்பத்தில் மகிழ்ச்சி நிறையும். வழக்குகளில் சாதகமான திருப்பங்கள் ஏற்படும்.
உத்தியோகஸ்தர்களின் சமயோஜித புத்தியை மேலதிகாரிகள் பாராட்டுவார்கள். வியாபாரிகளுக்கு வரவேண்டிய பணம் வந்து சேரும்.
விவசாயிகளுக்குப் பயிர்களில் புழு, பூச்சிகளின் பாதிப்பு இராது. அரசியல்வாதிகள் மாற்றுக் கட்சியினரின் நடவடிக்கைகளை கவனித்து வரவும்.
Advertisement
Advertisement
கலைத்துறையினர் வருமானத்தைக் குறைத்துக் கொண்டு புதிய ஒப்பந்தங்களை ஏற்றுக்கொள்வீர்கள். பெண்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவீர்கள். மாணவர்கள் தக்க உடற்பயிற்சிகளைச் செய்வீர்கள்.
சந்திராஷ்டம் - 25,26,27