முகப்பு
ஆண்டுப் பலன்கள்

தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2026 - மகரம்

மகர ராசிக்கு இந்த தமிழ்ப் புத்தாண்டு எப்படி இருக்கும்?

Updated On : 10 ஏப்ரல், 2026 at 2:50 PM
மகர ராசி
பகிர்:
Updated On : 9 ஏப்ரல், 2025 at 5:35 PM

கிரகநிலை

தன வாக்கு குடும்ப  ஸ்தானத்தில் சந்திரன், ராகு - தைரிய வீரிய  ஸ்தானத்தில் செவ்வாய், புதன், சனி - சுக ஸ்தானத்தில் சூர்யன், சுக்கிரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு - அஷ்டம  ஸ்தானத்தில் கேது என கிரகங்கள் வலம் வருகிறார்கள்.

கிரகமாற்றங்கள்

Advertisement

 27-06-2026 அன்று குரு பகவான் ரண ருண ரோக ஸ்தானத்தில்  இருந்து களத்திர  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

20-10-2026 அன்று குரு பகவான் களத்திர  ஸ்தானத்தில்  இருந்து அஷ்டம  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

13-02-2027 அன்று குரு பகவான் வக்ரம் அடைந்து களத்திர  ஸ்தானத்தில்  இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

13-11-2026 அன்று ராகு பகவான் தன வாக்கு குடும்ப  ஸ்தானத்தில்  இருந்து ராசிக்கு மாறுகிறார்.

13-11-2026 அன்று கேது பகவான் அஷ்டம  ஸ்தானத்தில்  இருந்து களத்திர  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்

எதிலும் போராட்ட குணத்துடன் ஈடுபட்டு வெற்றிகளைக் குவிக்கும் மகர ராசி அன்பர்களே நீங்கள் தன்னம்பிக்கை மிக்கவர்கள். கடுமையான உழைப்பின்  மூலம் அனைத்து காரியங்களிலும் வாகை சூடுவீர்கள். உங்கள் மனசாட்சிக்கு விரோதமான காரியங்களை செய்ய மாட்டீர்கள்.

உங்களின் வாழ்க்கை வசதிகள் உயரும். சிலர் வசதியான வீடுகளுக்கு மாறுவார்கள். திருமணம் தடைபட்டவர்களுக்கு திருமணம் நடந்தேறும். குழந்தை செல்வம் இல்லாதவர்களுக்கு அந்த பாக்கியம் கிடைக்கும். நண்பர்கள், கூட்டாளிகளுடன் ஏற்பட்ட பகை நீங்கும்.

நடக்காமல் தள்ளி வைத்திருந்த விஷயங்கள் சிறப்பாக நடந்தேறும். போட்டிகளை தைரியமாக எதிர்கொள்வீர்கள். புதிய வருமானம் தரும் தொழிலில் ஈடுபடுவீர்கள். புதிய வீடு கட்ட அஸ்திவாரம் போடுவீர்கள். வருமானம் குறைவாக இருந்த தொழில்களில் ஈடுபடுவதைத் தவிர்ப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறையும். உற்றார், உறவினர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். வம்பு, வழக்குகளில் உங்களுக்கு சாதகமாக தீர்ப்புகள் கிடைக்கும். சமுதாயத்தில் உயர்ந்தவர்களின் நட்பால் உங்கள் மதிப்பு, மரியாதை உயரும். உங்களுக்கு நன்மைகள் செய்யும் வகையில் புதிய நண்பர்கள் கிடைப்பார்கள்.  உங்கள் எண்ணங்கள் அனைத்தும் தடைகள் இல்லாமல் சுலபமாக நிறைவேறும்.

இந்தக் காலகட்டத்தில் உங்கள் வாழ்க்கையில் அதிர்ஷ்டகரமான திருப்புமுனைகள் உண்டாகி புதிய பாதையில் பயணிப்பீர்கள்.

புதிய ஆடை, அணிகலன்களை வாங்குவீர்கள். பொன், வெள்ளி போன்ற விலையுயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சொகுசு வாகனங்களில் பயணிப்பீர்கள். பல வழிகளில் வருமானம் கிடைத்து உங்களின் வாழ்க்கைத் தரம் உயரும்.

உங்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். எவரையும் சாராமல் தனித்து காரியங்களைச் செய்து சாதனை புரிவீர்கள். யோகா, ப்ராணாயாமம் செய்து மன அமைதி பெறுவீர்கள். விரும்பிய இடமாற்றங்கள் கிடைக்கும். களவு போயிருந்த பொருட்கள் மீண்டும் உங்களின் கை வந்து சேரும். காரியங்களில் பிடிப்பு ஏற்படும்.

மெதுவாக நடந்துகொண்டிருந்த காரியங்கள் விரைவாக முடியும். தனித்து உங்கள் எண்ணப்படி செயல்படுவீர்கள். உங்கள் செயலில் சுறுசுறுப்பு அதிகரிக்கும். மற்றபடி ரகசியங்களை எவரிடமும் பகிர்ந்துகொள்ள வேண்டாம்.

உத்யோகஸ்தர்கள்

நெருக்கடி கொடுத்து வந்த மேலதிகாரிகள் இடம் மாறிச் செல்வார்கள். சக ஊழியர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். சிலருக்கு ஊதிய உயர்வுடன் இடமாற்றம் கிடைக்கும். அலுவலகத்தில் கடன் பெறுவீர்கள். புதிய வாகனம் வாங்குவீர்கள். புதிய அனுபவங்களைக் கற்றுக்கொள்வீர்கள்.

வியாபாரிகள்

கொடுக்கல், வாங்கல் விஷயங்களில் எந்தக் குறைவும் ஏற்படாது. கூட்டாளிகளுடன் சேர்ந்து புதிய முயற்சிகளை செயல்படுத்துவீர்கள். தேவைக்கேற்ற சரக்குகளை வாங்கி விற்பனை செய்வீர்கள். சந்தையில் போட்டிகளை சாதுர்யமாக சமாளிப்பீர்கள்.

விவசாயிகள்

நல்ல விளைச்சலைக் காண்பீர்கள். பூமியால் லாபம் உண்டாகும். புதிய குத்தகைகளை நாடிச் செல்வீர்கள். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை  நடத்தி மகிழ்வீர்கள். வங்கிக் கடன்கள் மானியத்துடன் கிடைக்கும். ஆனாலும் கால்நடைகளுக்கு கூடுதலாக செலவ செய்ய நேரிடும். புழு பூச்சிகளால் பாதிப்பு ஏற்படாது.

அரசியல்வாதிகள்

அனைவரையும் அனுசரித்து நடந்துகொள்வீர்கள். கட்சி மேலிடத்தின் கனிவான பார்வை உங்கள் மீது விழுந்து உங்கள் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும். அரசு அதிகாரிகள் உங்கள் சொல் கேட்டு நடப்பார்கள். கட்சியில் உங்கள் செல்வாக்கு உயரும். உங்களின் மறைமுக எதிரிகளை இனம் கண்டு ஒதுக்குவீர்கள்.

கலைத்துறையினர்

நன்மை தரும் திருப்பங்கள் உண்டாகும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். சக கலைஞர்கள் நட்புடன் பழகுவார்கள்.  அவர்களால் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். ரசிகர் மன்றங்களுக்கு செலவு செய்து மகிழ்வீர்கள். மற்றபடி சுறுசுறுப்புடன் காரியங்களில் ஈடுபடவும்.

பெண்மணிகள்

கணவரிடம் பாசத்தோடு பழகுவீர்கள். இல்லத்தில் மகிழ்ச்சி நிறையும்.  ஆடை, ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். வீண் யோசனைகள் வேண்டாம்.

மாணவமணிகள்

படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தவும். இதனால் எதிர்பார்த்த மதிப்பெண்கள் கிடைக்கும்.  நண்பர்களிடம் வீட்டுக்கொடுத்துப் பழகவும்.

உத்திராடம் - 2, 3, 4

கலைத்துறையினருக்கு நற்பெயரும் கீர்த்தியும் வந்து சேரும். பொருளாதார வசதிகளும் பெருகிடவும் வாய்ப்பான நாளிது. சிலருக்கு புதிய சொத்துக்கள் வாங்கவும் பாக்கியம் ஏற்படும்.

திருவோணம்

தடைபட்டிருந்த அனைத்து காரியங்களும் அடுத்தடுத்து நடைபெறப் போகிறது. வெள்ளை உள்ளத்துடன் உலவும் உங்களுக்கு ஏற்பட்ட கஷ்டங்கள் அனைத்தும் விலகி நன்மைகள் நடக்கும்.

அவிட்டம் - 1, 2

சுற்றியிருக்கும் சோம்பேறிகளிடமிருந்து உங்களை நீங்கள் விலக்கிக் கொள்ளுங்கள்.  குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். எதிரிகளின் தொல்லைகள் குறையும்.

பரிகாரம்

சனிதோறும் அருகிலிருக்கும் சிவன் கோவிலுக்குச் சென்று ஸ்ரீபைரவரை வணங்கி வரவும். முடிந்தால் மிளகு விளக்கு போடவும்.

சொல்ல வேண்டிய மந்திரம்

தினசரி காலபைரவாஷ்டகம் பாராயணம் செய்யவும்.

மலர் பரிகாரம்

சனிக்கிழமைதோறும் பெருமாள் கோவிலில் இருக்கும் தாயாருக்கு மல்லிகைப் பூவை அர்ப்பணித்து 3 முறை வலம் வரவும். உங்களுக்கு  பொன்னான காலம் கனிந்து வரும்.

அதிர்ஷ்ட கிழமைகள்

வள்ர்பிறை: திங்கள், வியாழன், வெள்ளி

தேய்பிறை: திங்கள், வியாழன், வெள்ளி