ஜோதிட கேள்வி பதில்கள்

என் மகளுக்கு வேலை கிடைக்குமா? திருமணம் எப்போது கைகூடும்? 

தினமணி

உங்கள் மகளுக்கு கன்னி லக்னம், கும்ப ராசி. லக்னம் மற்றும் தொழில் ஸ்தானத்திற்கு அதிபதியான புதபகவான் தனம் மற்றும் பாக்கிய ஸ்தானத்திற்கும் அதிபதியான புதபகவானுடன் தன ஸ்தானமான இரண்டாம் வீட்டில் இணைந்து தர்மகர்மாதிபதி யோகத்தையும் பெறுகிறார்கள். பூர்வபுண்ணிய புத்திர மற்றும் ஆறாம் வீட்டிற்கும் அதிபதியான சனிபகவான் பூர்வபுண்ணிய ஸ்தானத்திலேயே அமர்ந்து லக்னத்தில் அமர்ந்திருக்கும் சுக களத்திர ஸ்தானாதிபதியான குருபகவானால் பார்க்கப்படுகிறார்.

குருபகவான் சூரியபகவானுடன் இணைந்து இருப்பதால் சிவராஜயோகமும் உண்டாகிறது. தற்சமயம் சனிபகவானின் தசையில் லாபாதிபதியான சந்திரபகவானின் புக்கிநடக்கத் தொடங்கியுள்ளது. அதனால் இன்னும் ஓராண்டுக்குள் அரசு உத்தியோகம் பார்க்கும் வரன் அமைந்து திருமணம் கைகூடும். அவருக்கும் அரசு அல்லது அரசு சார்ந்த துறைகளில் வேலை கிடைக்கும். தொழில் ஸ்தானத்தில் செவ்வாய்பகவான் திக்பலம் பெற்றிருப்பதால் வேலையில் உயர்ந்த நிலையை எட்டி விடுவார். பிரதி
வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.


 - வாசகர், செங்கம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

SCROLL FOR NEXT