ஜோதிட கேள்வி பதில்கள்

என் அண்ணன் மகனின் ஜாதகப் பலன்கள் எவ்வாறு உள்ளது?- பாலகிருஷ்ணன், ஆவடி

DIN

உங்கள் அண்ணன் மகனுக்கு மேஷ லக்னம், மேஷ ராசி. லக்னாதிபதி பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்து பாக்கியாதிபதியான குருபகவானால் பார்க்கப்படுகிறார். தற்சமயம், லக்னாதிபதியின் தசை நடக்கத் தொடங்கியுள்ளது. அவருக்கு இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் படித்த நல்ல உத்தியோகத்திலுள்ள பெண் அமைந்து பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் கைகூடும். உங்கள் சகோதரரின் மகனுக்கு தனுசு லக்னம், மீன ராசி. தற்சமயம் ஆறு மற்றும் 11 ஆம் வீட்டிற்கும் அதிபதியான சுக்கிரபகவானின் தசையில் பிற்பகுதி நடக்கத் தொடங்கியுள்ளது. இதில் இந்த ஆண்டு இறுதி வரையில் லக்னாதிபதியின் புக்தி நடக்கும். களத்திர ஸ்தானாதிபதி சுப பலத்துடன் அமர்ந்து குருபகவானுக்கு கேந்திர ஸ்தானத்திலும் அந்த வீட்டிற்கு அதிபதியான சனிபகவானுக்கு திரிகோண ராசியிலும் அமர்ந்திருப்பதால் மணவாழ்க்கை சீராகவே அமையும். இந்த ஆண்டு ஜூன் மாதத்திற்கு பிறகு திருமணம் கைகூடும். பிரதி வெள்ளிக்கிழமைகளில் பெருமாளையும் தாயாரையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்செந்தூரில் மே 22இல் வைகாசி விசாகம்

உடல் பருமன் குறைப்பு சிகிச்சையில் இளைஞா் உயிரிழப்பு: மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க முதல்வரிடம் வலியுறுத்தல்

மண்டல பனைபொருள் பயிற்சி நிலையத்தில் பதநீா் விற்பனை

அரியாங்குப்பம் கோயில் திருவிழா கொடியேற்றம்

ஜெயராக்கினி அன்னை ஆலய ஆண்டுப் பெருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT