ஜோதிட கேள்வி பதில்கள்

என் மருமகன் சொந்தமாக தொழில் செய்து வருகிறார். நிரந்தர வருமானம் கிடைக்குமா? பொருளாதார முன்னேற்றம் எப்போது ஏற்படும்? வெளிநாடு செல்லும் யோகம் உள்ளதா? குழந்தை பாக்கியம் எப்போது கிட்டும்? - வாசகர், காஞ்சிபுரம்

DIN

உங்கள் மருமகனுக்கு சிம்ம லக்னம் துலாம் ராசி. லக்னாதிபதி பன்னிரண்டாம் வீட்டில் மறைந்து இருப்பது சிறு குறை. பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதியான குருபகவான் லாப ஸ்தானத்தில் அமர்ந்து பூர்வபுண்ணிய புத்திர ஸ்தானத்தையும் அங்கு அமர்ந்திருக்கும் களத்திர ஸ்தானாதிபதியையும் தைரிய ஸ்தானத்தையும் அங்கு அமர்ந்திருக்கும் சந்திரபகவானையும் களத்திர ஸ்தானத்தையும் பார்வை செய்வது சிறப்பு. தர்மகர்மாதிபதிகளும் லக்னத்தில் அமர்ந்து இருப்பது சிறப்பு. தற்சமயம் குருபகவானின் தசையில் சுக்கிரபகவானின் புக்தி நடக்கிறது. இந்த காலகட்டத்திற்குள் மழலை பாக்கியம் உண்டாகும். மேற்கூறிய காலகட்டத்திற்குப்பிறகு வளைகுடா நாடுகளுக்குச் சென்று பொருளீட்டும் யோகம் உண்டாகும். எதிர்காலம், பொருளாதாரம் சீராகவே இருக்கும். பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகபட்ச வாக்குப்பதிவு செய்ய வேண்டும் -பிரதமர் மோடி

குஜராத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

SCROLL FOR NEXT