ஜோதிட கேள்வி பதில்கள்

எனக்கு வயது 71. எங்கள் பூர்வீக வீட்டை இடித்து, அங்கு அடுக்குமாடி கட்டடம் ஒப்பந்த முறையில் கட்ட ஆரம்பித்து இரண்டு வருடங்களாகின்றன. இன்னும் முடியவில்லை. கட்டடம் எப்போது முடிவு பெற்று நாங்கள் குடியேற இயலும்? பரிகாரம் ஏதும் செய்ய வேண்டுமா? - வாசகர், சேலம்

DIN

உங்களுக்கு மகர லக்னம், துலா ராசி. லக்னாதிபதி களத்திர ஸ்தானத்தில் திக்பலம் பெற்று அமர்ந்து மஹா கீர்த்தி யோகத்திலுள்ளார். தொழில் ஸ்தானத்தில் சுக்கிர, சந்திர, செவ்வாய், குரு பகவான்கள் இணைந்திருக்கிறார்கள். பாக்கிய ஸ்தானத்தில் பாக்கியாதிபதி உச்சம் பெற்று சூரியபகவானுடன் இணைந்திருக்கிறார். புத ஆதித்ய யோகம், குருமங்களயோகம், குருசந்திர யோகம், சந்திர மங்கள யோகம் போன்ற சிறப்பான யோகங்கள் உள்ளன. தற்சமயம் சுக்கிரபகவானின் தசையில் ராகுபகவானின் புக்தி நடப்பதால் இன்னும் ஒன்றரை ஆண்டுக்குள் ஒப்பந்தப்படி உங்களுக்கு கிடைக்கவேண்டிய வீடு கிடைத்து விடும். கவலை வேண்டாம். பரிகாரம் எதுவும் வேண்டாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று யோகம் யாருக்கு?

இன்று நல்ல நாள்!

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

SCROLL FOR NEXT