ஜோதிட கேள்வி பதில்கள்

என் மகனுக்கு 7 -ஆம் அதிபதியான குருபகவான் தசை நன்மை தருமா? அடுத்தடுத்த தசைகள் எவ்வாறு இருக்கும்? எனது மகளுக்கு செவ்வாய் மஹாதசை நன்மை தருமா? மருத்துவர் ஆகும் வாய்ப்புண்டா?  - வாசகி, தர்மபுரி

DIN

உங்கள் மகனுக்கு தற்சமயம் பாக்கிய ஸ்தானத்தில் கேந்திராதிபத்ய தோஷம் நீங்கப் பெற்றுள்ள குருபகவானின் தசை நடக்கிறது. இன்னும் இரண்டரை ஆண்டுகள் கழித்து அதாவது குருமஹா தசையின் பிற்பகுதி நடக்கத் தொடங்கியவுடன் அவரது வாழ்க்கையில் படிப்படியான வளர்ச்சி உண்டாகும். செவ்வாய்பகவான் பாக்கிய ஸ்தானத்தில் வர்கோத்தமத்தில் இருப்பது சிறப்பு. இதனால் ருணம் ரோகம் சத்ரு ஸ்தானமும் லாப ஸ்தானமும் சுப பலம் பெறுகின்றன. தொடரும் சனி புத மஹா தசைகள் யோக தசைகளாகவே செல்லும்.  உங்கள் மகளுக்கு கடக லக்னம், கன்னி ராசி. இன்னும் இரண்டரை ஆண்டுகள் வரையில் செவ்வாய் மஹா தசை நடக்கும். இந்த கால கட்டத்திற்குள் மருத்துவம் சம்பந்தப்பட்ட படிப்புகளை படிக்க வாய்ப்புண்டாகும். மற்றபடி தொடரும் லக்ன கேந்திரத்தில் அமர்ந்திருக்கும் ராகு மஹா தசையும் குரு, சனிபகவான்களின் தசையும் சிறப்பாகவே செல்லும். இருவருக்கும் எதிர்காலம் சிறப்பாக அமையும். பிரதி வியாழக்கிழமைகளிலும் சனிக்கிழமைகளிலும் சிவபெருமானை வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

SCROLL FOR NEXT