ஜோதிட கேள்வி பதில்கள்

என் மகனுக்கு 39 வயதாகிறது. திருமணம் தள்ளிப் போய்க்கொண்டிருக்கிறது. நிறைய திருக்கோயில்களில் பரிகாரங்களும் செய்துள்ளோம். எப்போது தகுதியான மணப்பெண் கிடைப்பார்? மூன்றாவது மகனுக்கும் 35 வயதாகிறது. இவர்களுக்கு எப்போது திருமணம் கைகூடும்? - வாசகர், மதுரை

DIN

உங்கள் மகனுக்கு சிம்ம லக்னம், மேஷ ராசி. லக்னத்தில் பூர்வபுண்ணியாதிபதி மற்றும் பாக்கியாதிபதிகள் இணைந்திருக்கிறார்கள். களத்திர ஸ்தானாதிபதி குடும்ப ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார். தற்சமயம் அயன ஸ்தானாதிபதியான சந்திரபகவானின் தசை நடக்கிறது. அவருக்கு அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குப்பிறகு உடனடியாக படித்த நல்ல வேலையிலுள்ள பெண் உங்கள் குலத்திலிருந்து அமைந்து திருமணம் கைகூடும். இன்னும் இரண்டரை ஆண்டுக்குள் உங்கள் மூன்றாவது மகனுக்கு திருமணம் நடக்கும். பிரதி திங்கள்கிழமைகளில் அம்மனை வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

SCROLL FOR NEXT