ஜோதிட கேள்வி பதில்கள்

எனக்கு 91 வயதாகிறது. மனைவி தவறிவிட்டார். எனது இளைய மகன் பக்கத்து ஊரில் குடும்பத்துடன் வசிக்கிறார். அவருக்கு அடிக்கடி உடல்நிலை கடுமையாக பாதிக்கப்படுகிறது. சமீபத்தில் மாரடைப்பும் ஏற்பட்டது. உடல்நிலையில் அதிக அக்கறை எடுத்துக்கொள்வதில்லை. நல்ல ஆயுள் ஆரோக்கியத்துடன் வாழ என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? - வாசகர், திருநின்றவூர்

DIN

உங்கள் மகனுக்கு விருச்சிக லக்னம், கடக ராசி, ஆயில்ய நட்சத்திரம். லக்னாதிபதி லக்னத்தில் ஆட்சி பெற்று ருசக யோகத்தைப் பெற்று குருபகவானுடன் இணைந்திருக்கிறார். இதனால் குருமங்கள யோகம் உண்டாகிறது. குருபகவானின் பார்வை பூர்வபுண்ணியம், களத்திரம் மற்றும் பாக்கிய ஸ்தானத்தையும் அங்கு அமர்ந்திருக்கும் பாக்கியாதிபதியையும் பார்வை செய்கிறார். இதனால் குருசந்திர யோகம் உண்டாகிறது. மேலும் பௌர்ணமி யோகம், புதஆதித்ய யோகம், நீச்சபங்க ராஜயோகம் ஆகிய சிறப்பான யோகங்கள் உள்ளன. தற்சமயம் பாக்கியாதிபதியான சந்திரபகவானின் தசையில் பிற்பகுதி நடப்பதாலும் தொடர்வதும் லக்னாதிபதியின் தசையாக உள்ளதாலும் எதிர்காலம், உடல், ஆரோக்கியம் இரண்டும் சிறப்பாக அமையும். வருமானமும் சீராக கிடைக்கும். தினமும் அவருக்காக முடிந்தவரை "நமசிவாய' மந்திரத்தை ஜபித்து வரவும். எதிர்காலம் சிறப்பாகவே செல்லும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வில்வித்தையில் இந்தியாவின் தீபிகா குமாரிக்கு வெள்ளிப் பதக்கம்

82 ஆண்டுகளுக்குப் பிறகு கோதண்டராமசுவாமி கோயில் மகாகும்பாபிஷேகம்!

காங். ஆட்சியில் தாலிக்கயிறுக்குக் கூட பாதுகாப்பில்லை -பிரதமர் மோடி கடும் தாக்கு

ரத்னம் வசூல் எவ்வளவு?

கத்தாழ கண்ணால குத்தாத...!

SCROLL FOR NEXT