ஜோதிட கேள்வி பதில்கள்

என் மகனது வாழ்க்கை, எதிர்காலம் எவ்வாறு இருக்கும்? வழக்கிலிருக்கும் என் மனைவி பெயரில் உள்ள மாமனாரின் சொத்து நல்ல படியாக எங்களுக்கு கிடைக்குமா? எனக்கு ஒரு விபத்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உடல்நிலை சற்று சரியில்லாமல் இருக்கிறேன். சற்றேனும் குணமாகுமா? பரிகாரம் ஏதும் செய்ய வேண்டுமா? - வாசகர், கும்பகோணம்

DIN

உங்கள் மகனுக்கு துலா லக்னம்,துலா ராசி. லக்னாதிபதி லக்னத்தில் ஆட்சி பெற்று பஞ்சமகா புருஷ யோகத்தையும் பெற்று நவாம்சத்தில் ரிஷப ராசியில் ஆட்சி பெறுகிறார். பூர்வபுண்ணியாதிபதியான சனிபகவான் லாப ஸ்தானத்தில் வர்கோத்தமத்தில் அமர்ந்து பூர்வபுண்ணிய ஸ்தானத்தைப் பார்வை செய்கிறார். பாக்கியாதிபதி புதபகவான் விரய ஸ்தானத்தில் உச்சம் பெற்று அமர்ந்திருக்கிறார். தற்சமயம் சனிபகவானின் தசையில் சுக்கிரபுக்தி இந்த ஆண்டு இறுதிவரை நடக்கும். இந்த ஆண்டு இறுதிக்குள் அவரின் வேலையில் நிரந்தரத்தன்மை உண்டாகிவிடும். துலா லக்னத்திற்கு சனிபகவான் ஒரு கேந்திரத்திற்கும் ஒரு திரிகோணத்திற்கும் அதிபதியாக வருவதால் அவரின் தசை முடிவதற்குள் (இன்னும் ஒன்பது ஆண்டுகள்) சொந்த வீடு, பொருளாதாரத்தில் மேன்மை ஆகியவைகள் உண்டாகிவிடும். வழக்கிலும் வெற்றி பெற்று விடுவார்கள். தொடர்வதும் பாக்கியாதிபதியான புதபகவானின் தசையாக இருப்பதால் எதிர்காலம் சிறப்பாக அமையும். பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் சிவபெருமானை வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய நிகழ்ச்சி

வியாபாரி தற்கொலை

இளைஞரை அரிவாளால் வெட்டியவா் கைது

கும்பகோணத்தில் பச்சைக்காளி, பவளக்காளி வீதியுலா

சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு

SCROLL FOR NEXT