ஜோதிட கேள்வி பதில்கள்

என் மகனுக்கு வயது 29. எம்.டெக்., படித்துள்ளார். படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்குமா? அரசு வேலை கிடைக்க வாய்ப்பு இருக்கிறதா? எப்போது கிடைக்கும்? திருமணம் எப்போது நடைபெறும்? - வாசகர், தூத்துக்குடி

DIN

உங்கள் மகனுக்கு கடக லக்னம், கன்னி ராசி. லக்னாதிபதி பாக்கியாதிபதியான குருபகவானுக்குக் கேந்திரம் பெற்றிருப்பதால் கஜகேசரி யோகம் உண்டாகிறது. குருபகவானின் பார்வை தொழில் ஸ்தானாதிபதியின் மீது படிகிறது. தொழில் ஸ்தானத்தில் தனாதிபதி உச்சம் பெற்று புதபகவானுடன் இணைந்து புதாதித்ய யோகத்தைப் பெறுகிறார். அவருக்கு தற்சமயம் ராகுபகவானின் தசையில் உச்சம் பெற்றிருக்கும் சுக்கிரபகவானின் புக்தி நடக்கிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் தகுதிக்கேற்ற வேலை தனியார்துறையில் நல்ல சம்பளத்துடன் கிடைத்துவிடும். அடுத்த ஆண்டு இறுதிக்குள் படித்த பெண் அமைந்து திருமணம் கைகூடும். தீர்க்காயுள் உண்டு. பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையையும் முருகப்பெருமானையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகரிப்பு: வாலிநோக்கம் கடற்கரையில் அடிப்படை வசதிகள் செய்துதரக் கோரிக்கை

ராமேசுவரம், திருவாடானையில் பலத்த மழை

அனுமதியின்றி மாட்டு வண்டிப் பந்தயம், மஞ்சுவிரட்டு : 10 போ் மீது வழக்கு

66 கட்டடங்களை அப்புறப்படுத்த குறிப்பாணை

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ஒருங்கிணைந்த தமிழ் முதுகலைப் பட்டப் படிப்பு

SCROLL FOR NEXT