ஜோதிட கேள்வி பதில்கள்

என் மகன் வெளிநாட்டில் வேலை செய்கிறார். தொடர்ந்து வெளிநாட்டிலேயே வேலை பார்க்கும் வாய்ப்பு உள்ளதா? திருமணம் எப்போது கைகூடும்? புத்திர பாக்கியம் எவ்வாறு இருக்கும்? 2- இல் சனி அமைப்பு எவ்வாறு உள்ளது? - வாசகர், சென்னை

DIN

உங்கள் மகனுக்கு விருச்சிக லக்னம், விருச்சிக ராசி. பாக்கிய ஸ்தானமும் அயன ஸ்தானமும் வலுவாக உள்ளதால் தொடர்ந்து வெளிநாட்டில் வேலை செய்வார். புத்திர ஸ்தானாதிபதியான குருபகவான் அஷ்டம ஸ்தானத்தில் புத ஆதித்யர்களுடன் இணைந்திருக்கிறார். குருபகவானின் பார்வை சுகாதிபதியின் மீதும் படிகிறது. இதனால் புத்திர பாக்கியத்திற்குக் குறைவு வராது. களத்திர ஸ்தானாதிபதி லக்னாதிபதியுடன் பாக்கிய ஸ்தானத்தில் இணைந்து இருக்கிறார். தற்சமயம் களத்திர ஸ்தானாதிபதியான சுக்கிரபகவானின் தசையில் முற்பகுதி முடியப்போகின்றது. அவருக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுக்குள் படித்த பெண் அயல் நாட்டில் அமைந்து திருமணம் கைகூடும். மற்றபடி வலுவான ஜாதகம் என்று கூறலாம். எதிர்காலம் சிறப்பாக அமையும். பிரதி வெள்ளிக்கிழமைகளில் பெருமாளையும் தாயாரையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல் நேரலை: ஸ்மிருதி இரானி பின்னடைவு

சசி தரூர் பின்னடைவு!

கே.கே. ஷைலஜா பின்னடைவு!

கர்நாடகம்: காங். பெரும் பின்னடைவு!

தமிழகத்தில் இந்தியா கூட்டணி முன்னிலை: அண்ணா அறிவாலயத்தில் கொண்டாட்டம்!

SCROLL FOR NEXT