ஜோதிட கேள்வி பதில்கள்

நான் வக்கீல் தொழில் செய்கிறேன். வயது 40. திருமணம் எப்போது நடைபெறும்? குடும்ப வாழ்க்கை எவ்வாறு இருக்கும்? - வாசகர், கும்மிடிப்பூண்டி

DIN

உங்களுக்கு சிம்ம லக்னம், மீன ராசி, உத்திரட்டாதி நட்சத்திரம். லக்னாதிபதி அயன ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார். பூர்வபுண்ணிய புத்திர ஸ்தானாதிபதி லாப ஸ்தானத்தில் அமர்ந்து தைரிய ஸ்தானம், பூர்வபுண்ணிய ஸ்தானம் மற்றும் களத்திர ஸ்தானங்களைப் பார்வை செய்கிறார். அதோடு லக்னத்திலிருந்து புதன், சுக்கிரன், சனி பகவான்களுடன் களத்திர ஸ்தானத்தைப் பார்வை செய்கிறார்கள். அதேநேரம் சர்ப்பதோஷம் உள்ளது. அயன ஸ்தானாதிபதி அஷ்டம ஸ்தானத்தில் கேதுபகவானுடனும் சுக பாக்கியாதிபதியான செவ்வாய்பகவான் குடும்ப ஸ்தானத்தில் ராகுபகவானுடன் இணைந்திருக்கிறார். தற்சமயம் தொழில் ஸ்தானாதிபதியான சுக்கிரபகவானின் தசையில் தன, லாபாதிபதியான புதபகவானின் புக்தி நடப்பதால் அடுத்த ஆண்டு இறுதிக்குள் படித்த நல்ல வேலையிலுள்ள பெண் அமைந்து திருமணம் கைகூடும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையையும் முருகப்பெருமானையும் வழிபட்டு வரவும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊராட்சி மன்றத் தலைவியின் வீட்டில் நகைகள் திருட்டு

சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகரிப்பு: வாலிநோக்கம் கடற்கரையில் அடிப்படை வசதிகள் செய்துதரக் கோரிக்கை

ராமேசுவரம், திருவாடானையில் பலத்த மழை

அனுமதியின்றி மாட்டு வண்டிப் பந்தயம், மஞ்சுவிரட்டு : 10 போ் மீது வழக்கு

66 கட்டடங்களை அப்புறப்படுத்த குறிப்பாணை

SCROLL FOR NEXT