ஜோதிட கேள்வி பதில்கள்

என்னுடயை மகள் வயிற்றுப் பேரன் மிகவும் சுட்டித்தனம் செய்கிறான். சமாளிக்க முடியவில்லை. ஏதாவது சிரமத்தை ஏற்படுத்திக்கொண்டே இருக்கிறான். சின்ன குழந்தை என்று எண்ண முடியவில்லை. அத்தளவுக்கு தொந்தரவு கொடுக்கிறான். அவனை நினைத்து எங்களுக்குப் பயமாக உள்ளது. நன்றாக படிப்பானா? நல்ல குணமுடன் இருப்பானா? எதிர்காலம் எவ்வாறு இருக்கும்? - வாசகர், சுசீந்திரம்

DIN

உங்கள் பேரனுக்கு மிதுன லக்னம், பூராடம் நட்சத்திரம், தனுசு ராசி. லக்னம் மற்றும் சுக ஸ்தானத்திற்கு அதிபதியான புதபகவான் அயன ஸ்தானத்தில் ஆறு மற்றும் பதினொன்றாமதிபதியான செவ்வாய்பகவானுடன் இணைந்திருக்கிறார். "மறைந்த புதன் நிறைந்த நிதி' என்பது ஜோதிட வழக்கு. பாக்கியாதிபதியும் விபரீத ராஜயோகம் பெற்று ஆறாம் வீட்டில் அமர்ந்து லக்னாதிபதியைப் பார்வை செய்கிறார். பூர்வபுண்ணியாதிபதி லக்னத்தில் அமர்ந்திருக்கிறார். தைரியாதிபதியும் களத்திர ஸ்தானாதிபதியும் உச்சம் பெற்றிருக்கிறார்கள். தற்சமயம் தைரிய ஸ்தானாதிபதியான சூரியபகவானின் தசை நடக்கிறது. இதன் பிற்பகுதியிருந்து அதாவது இன்னும் இரண்டாண்டுகளுக்குப்பிறகு அவரின் பழக்க வழக்கங்களில் நல்ல மாற்றம் உண்டாகத் தொடங்கிவிடும். படிப்பிலும் சிறந்து விளங்குவார். எதிர்காலம் சிறப்பாக அமையும். பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் சிவபெருமானை வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

SCROLL FOR NEXT