ஜோதிட கேள்வி பதில்கள்

என் நண்பரின் மகன் வெளிநாட்டில் நல்ல வேலையில் இருந்துள்ளார். தற்போது வீட்டில் குறைந்த வருமானத்தில் இருக்கிறார். எம்.எஸ்.சி., படித்துள்ள அவருக்கு தக்க வேலை கிடைக்குமா? திருமணம் எப்போது கைகூடும்?  - வாசகர், ஸ்ரீரங்கம்

DIN

உங்கள் நண்பரின் மகனுக்கு மகர லக்னம், கடக ராசி, பூசம் நட்சத்திரம். லக்னாதிபதி மற்றும் தனம் வாக்கு குடும்பாதிபதியான சனிபகவான் பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார். சனிபகவானின் மூன்றாம் பார்வை லாப ஸ்தானத்தின் மீதும், அங்கு அமர்ந்திருக்கும் தர்மகர்மாதிபதிகளின் மீதும், ஏழாம் பார்வை தைரிய ஸ்தானத்தின்மீதும், பத்தாம் பார்வை ருணம் ரோகம் சத்ரு ஸ்தானமான ஆறாம் வீட்டின் மீதும் படிகிறது. புத, சுக்கிர பகவான்களின் பார்வை பூர்வ புண்ணிய ஸ்தானத்தின் மீதும் படிகிறது. தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டிற்கும் அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டிற்கும் அதிபதியான குருபகவான் அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டில் சுக ஸ்தானமான நான்காம் வீட்டிற்கும் லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டிற்கும் அதிபதியான செவ்வாய்பகவானுடனும் ராகுபகவானுடனும் இணைந்திருக்கிறார். குருபகவானின் ஐந்தாம் பார்வை அயன ஸ்தானத்தின் மீதும் ஏழாம் பார்வை தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்தின் மீதும், அங்கு அமர்ந்திருக்கும் கேதுபகவானின் மீதும், ஒன்பதாம் பார்வை சுக ஸ்தானமான நான்காம் வீட்டின் மீதும் படிகிறது. தற்சமயம் சுக்கிரபகவானின் தசையில் நீச்சபங்க ராஜயோகம் பெற்றுள்ள சூரியபகவானின் புக்தி நடக்கிறது. இந்த ஆண்டு ஜூலை மாதத்திற்குப்பிறகு அவருக்கு திருமணம் கைகூடும். மறுபடியும் வெளிநாடு சென்று பொருளீட்டும் யோகமும் உண்டாகும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினம் தினம் திருநாள்: தினப்பலன்

இன்றைய ராசிபலன்கள்!

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

SCROLL FOR NEXT