ஜோதிட கேள்வி பதில்கள்

என் பேத்திக்கு எப்பொழுது திருமணம் கைகூடும்? அரசு வேலை கிடைக்குமா? என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?  - வாசகி, மகாலட்சுமி நகர்

DIN

உங்கள் பேத்திக்கு கடக லக்னம், கடக ராசி, பூசம் நட்சத்திரம். லக்னாதிபதி லக்னத்திலேயே ஆட்சி பெற்றிருக்கிறார். பூர்வபுண்ணியாதிபதி, தொழில் ஸ்தானாதிபதியான செவ்வாய்பகவான் ஆறாம் வீட்டில், ருணம், ரோகம், சத்ரு ஸ்தானமான ஆறாமதிபதியும் பாக்கியாதிபதியான ஒன்பதாமதிபதியான மூலதிரிகோணம் பெற்ற குருபகவானுடன் இணைந்து இருக்கிறார். இதனால் தர்மகர்மாதிபதி யோகம் உண்டாகிறது. இவர்களுடன் புத, சுக்கிரபகவான்களும் இணைந்து இருக்கிறார்கள். களத்திர, நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டிற்கும் அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டிற்கும் அதிபதியான சனிபகவான் அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டில் மூலதிரிகோணம் பெற்று அமர்ந்திருக்கிறார். சனிபகவான் களத்திர ஸ்தானத்திற்கு தன ஸ்தானமான இரண்டாம் வீட்டில் (பாவாத்பாவம்) அமர்ந்திருப்பதால் படித்த நல்ல வேலையிலுள்ள வரன் ஒன்றரை ஆண்டுக்குள் அமைந்து திருமணம் கைகூடும். அரசு சம்பந்தப்பட்ட வேலையும் அமையும். பிரதி திங்கள்கிழமைகளில் விநாயகப்பெருமானை வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா் தின மாநாடு: கூடலூா், பந்தலூரில் நாளை கடைகளுக்கு விடுமுறை

4-ஆவது கட்ட மக்களவைத் தோ்தலில் 1,717 போ் போட்டி

உள்ளூா் வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை

நாகை அரசு தலைமை மருத்துவமனை சிகிச்சைப் பிரிவுகள் மாற்றம்: சிபிஎம் ஆா்ப்பாட்டம்

மணிப்பூா் இனக் கலவரம்: ஓராண்டாகியும் நீடிக்கும் பிளவு!

SCROLL FOR NEXT