ஜோதிட கேள்வி பதில்கள்

என் மகன் ஹோமியோபதி மருத்துவர். அவருக்கு பெண் பார்த்து வருகிறோம். திருமணம் இன்னும் அமையவில்லை. எப்போது திருமணம் நடைபெறும்? வேலை பார்க்கும் பெண் அமையுமா?  - வாசகர், கரூர்

DIN

உங்கள் மகனுக்கு கும்ப லக்னம், ரிஷப ராசி, கிருத்திகை நட்சத்திரம். லக்னம் மற்றும் அயன ஸ்தானாதிபதியான சனிபகவான் தொழில் ஸ்தானத்தில் பூர்வபுண்ணியாதிபதியின் சாரத்தில் பூர்வபுண்ணியாதிபதி மற்றும் களத்திர ஸ்தானாதிபதிகளுடன் இணைந்து இருக்கிறார். களத்திர ஸ்தானாதிபதி பலம் பெற்றிருப்பதும் சிறப்பாகும். சுக, பாக்கியாதிபதி சுக்கிரபகவான் பாக்கிய ஸ்தானத்தில் மூலதிரிகோணம் பெற்றிருக்கிறார். லக்னத்தில் செவ்வாய், குருபகவான்கள் இணைந்து குருமங்கள யோகம் உண்டாகிறது. கஜகேசரி யோகம் உண்டாகிறது. குருபகவானின் பார்வை பூர்வபுண்ணிய ஸ்தானம், பாக்கிய ஸ்தானம், அங்கு அமர்ந்திருக்கும் சுக்கிரபகவானின் மீது படிகிறது. தற்சமயம், ராகுபகவானின் தசையில் பிற்பகுதி நடப்பதால் இந்த ஆண்டு இறுதிக்குள் சமதோஷமுள்ள பெண் அந்நிய உறவில் அமைந்து திருமணம் கைகூடும். அவர் சார்ந்திருக்கும் துறையிலிருந்து பெண் அமையும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையையும் பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் சிவபெருமானையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

SCROLL FOR NEXT