ஜோதிட கேள்வி பதில்கள்

மழலை பாக்கியம் உண்டாகும்

DIN


எனக்கு திருமணம் ஆகி ஓராண்டு ஆகிறது. இன்னும் புத்திர பாக்கியம் உண்டாகவில்லை. எனக்கு வாழ்வில் எப்பொழுது நல்ல திருப்பங்கள் உண்டாகும்? வேலைக்குச் செல்லும் யோகம் உண்டா? வருங்காலம் எப்படி இருக்கும்? என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?

-வாசகி, கோவை.

உங்களுக்கு தனுசு லக்னம், மிதுன ராசி, புனர்பூசம் நட்சத்திரம். லக்னம், சுக ஸ்தானத்திற்கு அதிபதியான குரு பகவான் தனம் வாக்கு குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டில் நீச்ச பங்க ராஜயோகம் பெற்று ஐந்தாம் பார்வையாக ருணம், ரோகம், சத்ரு ஸ்தானமான ஆறாம் வீட்டையும், ஏழாம் பார்வையாக அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டையும், ஒன்பதாம் பார்வையாக தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டையும் அங்கமர்ந்திருக்கும் பாக்கியாதிபதியான சூரிய பகவானையும் (சிவராஜயோகம்) பார்வை செய்கிறார். 

பூர்வ புண்ணிய புத்திர ஸ்தானமான ஐந்தாம் வீட்டிற்கும் அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டிற்கும் அதிபதியான செவ்வாய் பகவான் பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டில் சுக்கிர பகவானுடன் இணைந்திருக்கிறார். செவ்வாய் பகவான் தன் நான்காம் பார்வையாக தன் ஆட்சி வீடான விருச்சிக ராசியையும், அங்கமர்ந்திருக்கும் சனி பகவானையும் பார்வை செய்கிறார். களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டிற்கும், தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டிற்கும் அதிபதியான புத பகவான் லாபஸ்தானத்தில் வர்கோத்தமத்தில் கேது பகவானுடன் இணைந்திருக்கிறார்.  தற்சமயம் களத்திர ஸ்தானாதிபதியான புத பகவானின் தசையில் சுய புக்தி நடக்கிறது. அடுத்த ஆண்டு இறுதிக்குள் மழலை பாக்கியம் உண்டாகும். தகுதிக்கேற்ற வேலையும் கிடைக்கும். பிரதி தினமும் விநாயகப் பெருமானை வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்செந்தூரில் மே 22இல் வைகாசி விசாகம்

உடல் பருமன் குறைப்பு சிகிச்சையில் இளைஞா் உயிரிழப்பு: மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க முதல்வரிடம் வலியுறுத்தல்

மண்டல பனைபொருள் பயிற்சி நிலையத்தில் பதநீா் விற்பனை

அரியாங்குப்பம் கோயில் திருவிழா கொடியேற்றம்

ஜெயராக்கினி அன்னை ஆலய ஆண்டுப் பெருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT