ஜோதிட கேள்வி பதில்கள்

படித்த பெண் அமையும்

DIN


என் மகன் திருமணம் எப்பொழுது நடைபெறும்? எந்தத் திசையில் பெண் அமையும்? குழந்தை பாக்கியம் எப்படி உள்ளது? எதிர்காலம் எவ்வாறு அமையும்? 

-வாசகர், தொட்டியப்பட்டி. 

உங்கள் மகனுக்கு மிதுன லக்னம், மகர ராசி, திருவோணம் நட்சத்திரம். லக்னம் மற்றும் சுக ஸ்தானமான நான்காம் வீட்டிற்கும் அதிபதியான புத பகவான் அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டில் சுப பலத்துடன் அமர்ந்திருப்பது சிறப்பு. பூர்வ புண்ணிய புத்திர ஸ்தானமான ஐந்தாம் வீட்டிற்கும், அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டிற்கும் அதிபதியான சுக்கிர பகவான் லக்னத்தில் அமர்ந்திருக்கிறார். புத, சுக்கிர பகவான்களின் பரிவர்த்தனை ஜாதகத்திற்கு வலுவூட்டும் அமைப்பாகும். பாக்கியாதிபதியான சனி பகவான் களத்திர நட்பு ஸ்தானத்தில் திக்பலம் பெற்று லக்னத்தையும், அங்கு அமர்ந்திருக்கும் சுக்கிர பகவானையும் பார்வை செய்கிறார். தற்சமயம் பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் ராகு பகவானின் தசையில் இறுதிப்பகுதி நடக்கிறது. தற்சமயம் நடப்பதும் பொங்கு சனியாகவும் உள்ளது. அவருக்கு இந்த ஆண்டே படித்த பெண் தெற்கு, தென் கிழக்கு திசைகளிலிருந்து அமைந்து திருமணம் கைகூடும். புத்திர பாக்கியம் உண்டு. எதிர்காலம் சிறப்பாக அமையும். பிரதி வியாழக்கிழமைகளில் குரு பகவானையும், தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அயலக தமிழர்கள் பதிவு செய்ய அழைப்பு

வீட்டிலிருந்தபடியே வாக்களித்த மூத்த அரசியல் தலைவர்கள்!

கேள்விக்குறியாகும் மாஞ்சோலை தொழிலாளர்களின் எதிர்காலம்: சீமான்

ஒற்றை ரோஜா... ஷிவானி நாராயணன்!

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா?

SCROLL FOR NEXT