ஜோதிட கேள்வி பதில்கள்

என் மகனுக்கு திருமணம் எப்பொழுது நடக்கும். தற்பொழுது வேலைக்குச் சென்று வருகிறார். அதைத் தொடரலாமா அல்லது சொந்தத் தொழில் செய்யலாமா?

DIN

என் மகனுக்கு திருமணம் எப்பொழுது நடக்கும். தற்பொழுது வேலைக்குச் சென்று வருகிறார். அதைத் தொடரலாமா அல்லது சொந்தத் தொழில் செய்யலாமா?

- வாசகர், கரூர்

உங்கள் மகனுக்கு மேஷ லக்னம், சிம்ம ராசி, பூரம் நட்சத்திரம். லக்னம், எட்டாம் வீட்டுக்கதிபதியான செவ்வாய் பகவான் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சுகாதிபதியான சந்திர (சந்திர மங்கள யோகம்) பகவானுடன் இணைந்திருக்கிறார். இதனால் புத்திர பாக்கியம் உண்டு.பூர்வ புண்ணிய புத்திர புத்தி ஸ்தானாதிபதி, ஆறாம் வீட்டில் களத்திர நட்பு ஸ்தானாதிபதியான நீச்ச பங்க ராஜயோகம் பெற்றிருக்கும் சுக்கிர பகவானுடன் இணைந்து நவாம்சத்தில் ஆட்சி பெறுகிறார். 
பாக்கிய, அயன ஸ்தானாதிபதி குரு பகவான் தொழில் ஸ்தானத்தில் நீச்ச பங்க ராஜ யோகம் பெற்று, ஐந்தாம் பார்வையாக தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையாக சுக ஸ்தானத்தையும், ஒன்பதாம் பார்வையாக ஆறாம் வீட்டையும் அங்கமர்ந்திருக்கும் புத்திர ஸ்தானாதிபதியான சூரிய (சிவ ராஜயோகம்) பகவானையும், களத்திர நட்பு ஸ்தானாதிபதியான சுக்கிர பகவானையும் பார்வை செய்கிறார்.தொழில் லாப ஸ்தானாதிபதி சனி பகவான் எட்டாம் வீட்டில் குரு பகவானின் சாரத்திலமர்ந்திருக்கிறார். 
மூன்று, ஆறாம் வீட்டுக்கதிபதி புத பகவான் களத்திர நட்பு ஸ்தானத்தில் கேது பகவானுடன் இணைந்து, அந்த வீட்டுக்கதிபதியான சுக்கிர பகவானுடன் பரிவர்த்தனை ஆகியுள்ளார். 
தற்சமயம், ராகு பகவானின் தசையில் சுய புக்தி நடக்கிறது. அடுத்த ஆண்டு இறுதிக்குள் சம தோஷமுள்ள பெண் அமைந்து திருமணம் கை கூடும். வேலையில் இருப்பதே அவருக்கு உகந்ததாகும். பிரதி வெள்ளிக்கிழமைகளில் மஹாலட்சுமியை வழிபட்டு வரவும். வேறு பரிகாரம் எதுவும் தேவையில்லை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவை தேர்தல்: மூத்த அரசியல் தலைவர்கள் வீட்டிலிருந்தபடியே வாக்குப்பதிவு

திமிரும் தன்னடக்கமும்...!

வார இறுதி நாட்கள் - மெட்ரோ அறிவித்த சூப்பர் ஆஃபர்

மருத்துவ கடைநிலை ஊழியர்களுக்கு 3 விதமான பணிநேரங்கள்: மக்கள் நல்வாழ்வுத் துறை

நாட்டு நடப்பு!

SCROLL FOR NEXT