எண் ஜோதிடம்

ஜூன் மாத எண்கணித பலன்கள் - 1

DIN

1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு

நேர்மையும் நிதானமும் ஒருங்கே அமையப்பெற்ற முதலாம் எண்ணில் பிறந்தவர்களே இந்த மாதம்  பல வகையிலும் நற்பலன்கள் தேடி வரும். தெய்வபக்தி அதிகரிக்கும். பயணங்கள் மகிழ்ச்சி தரும்.  மனதில் சுய நம்பிக்கை அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் ஏற்பட்ட சிக்கல்கள் தீரும். ஆர்டர்கள் மற்றும் பொருட்கள் சப்ளை செய்வதில் இருந்த சுணக்கம் அகலும். பணவரத்து அதிகரிக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் பணி சுமையை ஏற்க வேண்டி இருக்கும். பயண செலவு உண்டாகலாம். குடும்பத்தில் இருப்பவர்களால் இருந்து வந்த தொல்லைகள் அகன்று மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். ஒருவரை ஒருவர் மனம் விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும். பெண்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

கலைத்துறையினருக்கு வீண் அலைச்சல், காரிய தாமதம் போன்றவை ஏற்படலாம். அரசியல்துறையினருக்கு கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரச்சனை தீரும். மாணவர்களுக்கு  கல்விக்காக செலவு உண்டாகும். கல்வியில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை அதிகரிக்கும்.

பரிகாரம்: திங்கள்கிழமையன்று குலதெய்வத்தை வணங்கி வர காரிய தடைகள் நீங்கும். எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாய்ப்புகள் தேடிவரும் விருச்சிக ராசிக்கு: தினப்பலன்கள்!

மின்தடையைக் கண்டித்து பெண்கள் சாலை மறியல்

மீன்சுருட்டி தேசிய நெடுஞ்சாலையில் எஸ்.பி. ஆய்வு

கூட்டணி ஆட்சிக்கு அச்சாரமிடும் தவெக!

விமானத்தில் தகராறு: கீழே இறக்கிவிடப்பட்ட அதிமுக நிா்வாகி

SCROLL FOR NEXT