எண் ஜோதிடம்

ஜனவரி மாத எண்கணித பலன்கள் - 4

எப்படி இருக்கப்போகிறது இந்த மாதம்..

ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன்

4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு

தன்னம்பிக்கையுடன் சுதந்திரமாக செயல்பட வேண்டும் என்ற எண்ணத்துடன் செயலாற்றும் நான்காம் எண் அன்பர்களே இந்த மாதம் நினைத்த காரியத்தை நிறைவேற்றுவதில் வேகம் காட்டுவீர்கள். சகோதரர் வழியில்  நன்மை உண்டாகும். எதையும் மனோ தைரியத்துடன் செய்து முடிப்பீர்கள். தொழில்கள் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு கீழ்நிலையில் உள்ளவர்களால் லாபம் உண்டாகும். எதிர்பார்த்த நிதி உதவி கிடைக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் இடமாற்றம் பற்றி ஆலோசிப்பார்கள். பெண்களுக்கு கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கை தேவை. மாணவர்களுக்கு பாடங்களில் சந்தேகம் கேட்பதற்கு தயக்கம் காட்டாமல் இருப்பது வெற்றிக்கு உதவும்.  கலைத்துறையினருக்கு பொருளாதாரத்தில் பிரச்சினை இருக்காது. அரசியல் துறையினருக்கு கடந்தகாலத்தில் உங்களை விட்டுச் சென்றவர்கள் விரும்பி வந்து சேர்வார்கள்.

பரிகாரம்: செவ்வாய்கிழமை அன்று துர்க்கை அம்மனுக்கு விளக்கு ஏற்றி வழிபட்டு வர காரிய வெற்றி உண்டாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழகத்தில் 3 நாள்களுக்கு கனமழை தொடரும்!

இந்த வார ஓடிடி படங்கள்!

சிறந்த படங்களுக்கான ஆஸ்கர் பட்டியலில் 4 இந்திய படங்கள்!

கோடியக்கரையில் கடல் சீற்றம்: மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை!

தவெக தேர்தல் அறிக்கை குழு அறிவிப்பு: செங்கோட்டையனுக்கு இடமில்லை!

SCROLL FOR NEXT