முகப்பு
தமிழ் மாதப் பலன்கள்

புரட்டாசி மாதப் பலன்கள் - கடகம்

எப்படி இருக்கப்போகிறது இந்த மாதம்..

Updated On : 18 செப்டம்பர், 2025 at 4:34 PM
மாதப் பலன்கள்
பகிர்:

கிரகநிலை:

தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சுக்கிரன், கேது - தைரிய வீரிய ஸ்தானத்தில் சூரியன், புதன் - சுக ஸ்தானத்தில் செவ்வாய் - அஷ்டம ஸ்தானத்தில் சனி (வ), ராஹூ - அயன சயன போக ஸ்தானத்தில் குரு என கிரக நிலைகள் உள்ளன.

கிரகமாற்றம்:

Advertisement

29.09.2025 அன்று  தைரிய வீரிய  ஸ்தானத்தில்  இருந்து  புதன்   சுக ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.

08.10.2025 அன்று  அயன சயன போக  ஸ்தானத்தில்  இருந்து  குரு பகவான் அதிசாரமாக ராசிக்கு  மாறுகிறார்.

10.10.2025 அன்று  தன வாக்கு குடும்ப  ஸ்தானத்தில்  இருந்து  சுக்கிரன்   தைரிய வீரிய  ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.

பலன்:

எல்லா முயற்சிகளும், காரியங்களும் சாதகமான பலன் தரும் மாதம். பணவரத்து அதிகரிக்கும். கடினமான வேலைகளையும் எளிதாக செய்து முடிக்கும் திறமை உண்டாகும். மனதில் இருந்த தயக்கம், பயம் நீங்கும். வெளியூர், வெளிநாடு பயணங்கள் செல்ல எடுக்கும் முயற்சிகள் சாதகமான முடியும். தொழில் வியாபாரம் முன்னேற்ற மடையும். லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வும் கூடுதல் பொறுப்புகளும் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை காணப்படும். சுப காரியங்கள் நடக்கலாம். சகோதரர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பெண்களுக்கு எந்த வேலையையும் எளிதாக செய்து விடுவீர்கள். கலைத்துறையினருக்கு சக கலைஞர்களைப் பகைத்துக் கொள்ளாமல் சுமூகமாகப் பழகி வருவது அவசியம். அரசியல்வாதிகளுக்கு கடினமான இருக்ககூடும். மாணவர்களுக்கு திறமை வெளிப்படும்.

புனர்பூசம்:

இந்த மாதம் தொழில் வியாபாரத்தில் சீரான நிலை காணப்படும். எதிர்பார்த்தபடி ஆர்டர்கள் கிடைப்பது தாமதமாகலாம். அரசாங்கம்  தொடர்பான காரியங்களில் மெத்தனபோக்கு காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு விருப்பமற்ற இடமாற்றம் உண்டாகலாம்.

பூசம்:

இந்த மாதம் தொழில் வியாபாரம் தொடர்பாக அலைய வேண்டி இருக்கும். எதிர்பார்த்த நிதி வசதி கிடைத்தாலும், திட்டமிட்டதை விட கூடுதல் செலவும் இருக்கும். பணியாளர்களிடம் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரி கூறுவது படி நடந்து கொள்வது நன்மை தரும். நிலுவையில் உள்ள பணம் வரலாம்.

ஆயில்யம்:

இந்த மாதம் குடும்பத்தில் இருப்பவர்களால் சிறுசிறு பிரச்சனைகள் உண்டாகலாம். குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்திலும், வாழ்க்கை துணையின் ஆரோக்கியத்திலும் கவனம் தேவை. கணவன், மனைவிக்கிடையே  இருந்த மனகசப்பு மாறும்.

பரிகாரம்: சப்த கன்னியரை தீபம் ஏற்றி வணங்க மன கவலை தீரும். எதிர்ப்புகள் அகலும். எல்லாவற்றிலும் நன்மை உண்டாகும்.

சந்திராஷ்டம தினங்கள்:     அக் 04, 05

அதிர்ஷ்ட தினங்கள்: அக் 13, 14

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.