மாதப் பலன்கள் 
தமிழ் மாதப் பலன்கள்

புரட்டாசி மாதப் பலன்கள் - துலாம்

எப்படி இருக்கப்போகிறது இந்த மாதம்..

இணையதளச் செய்திப் பிரிவு

கிரகநிலை:

ராசியில் செவ்வாய் - பஞ்சம ஸ்தானத்தில் சனி (வ), ராஹூ - பாக்கிய ஸ்தானத்தில் குரு - லாப ஸ்தானத்தில் சுக்கிரன், கேது - அயன சயன போக ஸ்தானத்தில் சூரியன், புதன் என கிரக நிலைகள் உள்ளன.

கிரகமாற்றம்:

29.09.2025 அன்று  அயன சயன போக  ஸ்தானத்தில்  இருந்து  புதன்   ராசிக்கு  மாறுகிறார்.

08.10.2025 அன்று  பாக்கிய ஸ்தானத்தில்  இருந்து  குரு பகவான் அதிசாரமாக தொழில்  ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.

10.10.2025 அன்று  லாப  ஸ்தானத்தில்  இருந்து  சுக்கிரன்   அயன சயன போக  ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.

பலன்:

இந்த மாதம் எடுத்த காரியங்களில் இருந்த தடைதாமதம் நீங்கும் மாதம். பணவரத்து அதிகரிக்கும். எந்த ஒரு வேலையை செய்யும் போதும் மனமகிழ்ச்சியுடன் செய்வீர்கள். வீடு, வாகனம் வாங்கும் சுபச்செலவுகள் ஏற்படலாம். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் கூடும். புதிய தொடர்புகள் மகிழ்ச்சி தருவதாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் புத்தி சாதூரியத்தால் முன்னேற்றம் காண்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நிர்பந்தமாக இடமாற்றம் அல்லது பணிமாற்றம் இருக்கலாம். உழைப்பு அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் குறையும். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வதன் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். பெண்களுக்கு சுபச்செலவு அதிகரிக்கும். கலைத்துறையினருக்கு திறமைகளை வெளிக்கொண்டு சிறந்த காலகட்டம் இதுவாகும். அரசியல்வாதிகளுக்கு உங்கள் மீது தலைமை அதிகமான நம்பிக்கை கொள்ளும். மாணவர்களுக்கு கல்வி பற்றிய சிந்தனை அதிகரிக்கும்.

சித்திரை:

இந்த மாதம் அடுத்தவரை  நம்பி காரியத்தில் இறங்கும் போது கவனம் தேவை. தொழில் வியாபாரம் தொடர்பான சிறிய பிரச்சனைகளை சந்திக்க வேண்டி இருக்கும். தடைகளை  தாண்டி முன்னேறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எந்தபணியை முதலில் முடிப்பது போன்ற குழப்பத்திற்கு ஆளாக வேண்டி இருக்கும்.

ஸ்வாதி:

இந்த மாதம் குடும்பத்தில் இருப்பவர்களால் வீண் பிரச்சனை குழப்பம் போன்றவை ஏற்பட்டு  பின்னர் நீங்கும். கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை தோன்றலாம். பிள்ளைகளிடம் பேசும் போது எச்சரிக்கை தேவை. உறவினர்களிடம் எந்த உறுதியையும் தராமல் இருப்பது நல்லது.

விசாகம்:

இந்த மாதம் அடுத்தவர்களுக்கு உதவிகள் செய்வதில் சங்கடமான சூழ்நிலை உண்டாகும். சமாளித்து முன்னேறும் திறமை இருக்கும். மாணவர்கள் கல்வியில் முன்னேற வேண்டும் என்று பாடுபடுவீர்கள். போட்டிகள் சாதகமான பலன் தரும்.

பரிகாரம்: நவக்கிரக சுக்கிரனை வணங்க எல்லா பிரச்சனைகளிலும் சாதகமான பலன் கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும்.

சந்திராஷ்டம தினங்கள்:     அக் 10, 11, 12

அதிர்ஷ்ட தினங்கள்: செப் 22, 23

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொண்டர்களை ஒழுங்குபடுத்த வேண்டாமா? TVK-வுக்கு நீதிமன்றம் கேள்வி! | செய்திகள்: சில வரிகள் | 18.9.25

மாத்தளை சோமு நூறு சிறுகதைகள்

அருந்ததி ராயின் புத்தக அட்டைப் படத்துக்கு எதிரான வழக்கு! மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு!

பழந்தமிழர் மரபும் கலையும்

அமெரிக்காவில் போதைப்பொருள் விவகாரம்! தொடர்புடைய இந்தியர்கள் விசாவுக்கு தடை!

SCROLL FOR NEXT