ஆட்டோமொபைல்ஸ்

"ரீகால்" ஆகும் 539 ஸ்கோடா ஆக்டாவியா கார்கள்!

DIN

ஸ்கோடா இந்தியா நிறுவனம், நவம்பர் 2015 முதல் ஏப்ரல் 2016 வரை தயாரிக்கப்பட்ட 539 ஆக்டாவியா செடான் கார்களுக்கு "ரீகால்" என்னும் திரும்ப அழைத்தலை மேற்கொண்டிருக்கிறது. 

சைல்ட் லாக் பழுது காரணமாக இந்த திரும்ப அழைத்தல் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அந்நிறுவனம் அறிவித்திருக்கிறது. இதன் மூலம் கோடா ஆக்டாவியாவின் பின் கதவுகளிலுள்ள சைல்ட் லாக் சிஸ்டம் பரிசோதிக்கப்பட்டு, தேவைப்பட்டால் புதிய சைல்ட் லாக் சிஸ்டம் மாற்றித்தரப்படுகிறது. சைல்ட் லாக் சிஸ்டத்தை பரிசோதனை செய்ய மொத்தமே 12 நிமிடங்களும், புதிய சைல்ட் லாக் சிஸ்டத்தை மாற்ற அதிகபட்சமாக 45 நிமிடங்களே ஆகும் என அந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது.  

இந்த நடவடிக்கைகள் அனைத்தும் இலவசமாகவே செய்து தரப்படும்.  அந்தந்த பகுதி ஸ்கோடா டீலர்கள், தங்களது வாடிக்கையாளர்களுக்கு இது குறித்து தகவல் தெரிவித்து இலவச பழுது பார்த்தலை செய்து தருவார்கள் எனவும் ஸ்கோடா நிறுவனம் தெரிவித்திருக்கிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது எப்படி? ரோஹித் சர்மா விரிவான பதில்!

சேலையில் தேவதை! மடோனா செபாஸ்டியன்...

SCROLL FOR NEXT