ஆட்டோமொபைல்ஸ்

பிஎஸ்-III வாகனத் தடை பின்னடைவை ஏற்படுத்தவில்லை

DIN

பிஎஸ்-III வகை வாகன விற்பனைக்கான தடை அசோக் லேலண்ட் நிறுவனத்திற்கு எவ்வித பொருளாதாரப் பின்னடைவையும் ஏற்படுத்தவில்லை என அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், நிர்வாக இயக்குநருமான வினோத் கே. தாசரி கூறினார்.
சென்னையில் அவர் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை தெரிவித்ததாவது: வாகனத்திலிருந்து வெளியேறும் புகையை மறுசுழற்சி செய்யும் அதிநவீனத் தொழில்நுட்பத்தை உள்நாட்டில் வடிவமைத்து உருவாக்கிய பிஎஸ்-IV வகை என்ஜினை அறிமுகப்படுத்துவது பெருமையளிக்கிறது. 130 குதிரைத் திறனுக்கு மேற்பட்ட திறன் கொண்ட என்ஜின்களுக்கு இந்த தொழில்நுட்பத்தை முதன்முதலில் அறிமுகப்படுத்தும் நிறுவனம் அசோக் லேலண்ட். பிஎஸ்-III என்ஜின்களை மாற்றி பிஎஸ்-IV வகை என்ஜின்கள் பொருத்தும் வாகனங்களின் எண்ணிக்கை 10,644. சுமார் ரூ.1.5 லட்சம் மதிப்பு கொண்ட பிஎஸ்-III என்ஜின்களை மேம்படுத்தி ரூ 2 லட்சம் வரை விற்பனை செய்ய முடிவதால், பிஎஸ்-III தடை அறிவிப்பு நிறுவனத்திற்கு எவ்விதப் பொருளாதாரப் பின்னடைவையும் ஏற்படுத்தவில்லை என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

SCROLL FOR NEXT