ஆட்டோமொபைல்ஸ்

'ஜி.எஸ்.டி.யால் டிராக்டர் இடுபொருள் செலவினம் ரூ.25,000 உயரும்'

DIN

சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி) விதிப்பால் டிராக்டர் தயாரிப்புக்கான இடுபொருள் செலவினம் ரூ.25,000 வரை உயரும் என டிராக்டர் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு (டி.எம்.ஏ.) கவலை தெரிவித்துள்ளது.
அந்த அமைப்பின் தொழில்நுட்பக் குழு தலைவர் டி.ஆர்.கேசவன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பது:
ஜி.எஸ்.டி-யில் டிராக்டர் தயாரிப்பு உபகரணங்கள் மீதான வரி முன்பு 28 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டது. இந்த நிலையில், உற்பத்தியாளர் கோரிக்கைக்கு இணங்கி, சில டிராக்டர் தயாரிப்பில் பாகங்களுக்கான வரி விகிதம் மட்டும் 28 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டது. இது மிகவும் வரவேற்கத்தக்கது.
இருப்பினும், தயாரிப்பில் முக்கியப் பங்காற்றும் என்ஜின், டிரான்ஸ்மிஷன், ஆக்ஸில், சென்டர் ஹவுசிங், டயர், டியூப் உள்ளிட்ட இதர இடுபொருள்களுக்கான வரி விகிதம் இன்னும் 28% என்ற அளவிலேயே நீடிக்கிறது. இது முற்றிலும் முரண்பாடான நிலையாகும்.
இதுகுறித்து டாஃபே நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியும், நிர்வாக இயக்குநருமான மல்லிகா ஸ்ரீநிவாஸன் கூறுகையில், டிராக்டர் உற்பத்தியில் முக்கிய அங்கம் வகிக்கும் பாகங்களுக்கு அதிகபட்ச வரி விதிக்கப்பட்டதையடுத்து அதன் விலை ரூ.25,000 வரை அதிகரிக்கும். இதனால், இத்தொழிலில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கு கூடுதல் நடைமுறை மூலதனமாக ரூ.1,600 கோடி தேவைப்படும். இது, அந்நிறுவனங்களை நெருக்கடியில் ஆழ்த்தும். டிராக்டரின் விலை அதிகரிக்கும்பட்சத்தில் அது விவசாயியை மட்டுமின்றி விவசாயத்திலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றார்.
எனவே, வேளாண் சமூகத்தினரின் நலனைக் கருத்தில் கொண்டு, டிராக்டருக்கான அனைத்து உபகரணங்களுக்கான வரியையும் சீரான வகையில் 18 சதவீதமாக நிர்ணயிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று நல்ல நாள்!

இன்று யோகம் யாருக்கு?

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

SCROLL FOR NEXT