ஆட்டோமொபைல்ஸ்

ஜனவரி மாத வாகன விற்பனை விறுவிறு

DIN

பண்டிகை காலத்தையொட்டி நடப்பு ஆண்டின் தொடக்கமான ஜனவரி மாதத்தில் வாகன விற்பனை விறுவிறுப்புடன் காணப்பட்டது. 
பஜாஜ் ஆட்டோ
பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் நடப்பாண்டு ஜனவரி மாத வாகன விற்பனை 3,53,147-ஆக இருந்தது. கடந்த 2017 இதே கால அளவில் விற்பனையான 2,41,917 வாகனங்களுடன் ஒப்பிடும்போது இது 46% அதிகமாகும். உள்நாட்டு விற்பனை 50% உயர்ந்து 2,02,193ஆக காணப்பட்டது. 
மோட்டார்சைக்கிள்கள் விற்பனை 36% அதிகரித்து 1,63,111-ஆகவும், வர்த்தக வாகன விற்பனை 154% உயர்ந்து 39,082-ஆகவும், ஏற்றுமதி 41% அதிகரித்து 1,50,954-ஆகவும் இருந்தது. 
டிவிஎஸ் மோட்டார்
சென்னையைச் சேர்ந்த டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் ஜனவரி மாத வாகன விற்பனை 31% அதிகரித்து 2,71,801-ஆக இருந்தது. மொத்த இருசக்கர வாகன விற்பனை 2,02,2069-லிருந்து 30.1% உயர்ந்து 2,62,995-ஆனது. ஏற்றுமதி 25.5% வளர்ச்சி கண்டு 42,802-ஆக இருந்தது.
அசோக் லேலண்ட்
ஹிந்துஜா குழுமத்தைச் சேர்ந்த அசோக் லேலண்ட் நிறுவனம் சென்ற ஜனவரியில் 18,101 வாகனங்களை விற்பனை செய்தது. கடந்த ஆண்டு இதே கால அளவில் விற்பனையான 14,872 வாகனங்களுடன் ஒப்பிடுகையில் இது 21.7% அதிகம். நடுத்தர மற்றும் கனரக வர்த்தக வாகன விற்பனை 12,056-லிருந்து அதிகரித்து 13,643-ஆனது. இலகு ரக வர்த்தக வாகனங்கள் விற்பனை 58% 4,458-ஆனது. 
மாருதி சுஸூகி
கார் தயாரிப்பு மற்றும் விற்பனையில் முதலிடத்தில் உள்ள மாருதி சுஸூகியின் ஜனவரி மாத விற்பனை 4.8% அளவுக்கே வளர்ச்சி கண்டு 1,51,351-ஆக இருந்தது. உள்நாட்டில் விற்பனை 5 சதவீதம் உயர்ந்து 1,40,600-ஆக காணப்பட்டது. 
ஆல்டோ, வேகன்ஆர் உள்ளிட்ட சிறிய ரக கார்களின் விற்பனை 12.2% சரிந்து 33,316-ஆக இருந்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

SCROLL FOR NEXT