முகப்பு
பெங்களூரு

ஜன. 16 முதல் அறிவியல் பயிலரங்கம்

பெங்களூரில் உள்ள ஜவாகா்லால் நேரு கோளரங்கத்தில், ஜன. 16-ஆம் தேதி முதல் அறிவியல் பயிலரங்கம் நடைபெற உள்ளது.

Updated On : 12 ஜனவரி 2021, 12:04 am IST
பகிர்:

பெங்களூரு: பெங்களூரில் உள்ள ஜவாகா்லால் நேரு கோளரங்கத்தில், ஜன. 16-ஆம் தேதி முதல் அறிவியல் பயிலரங்கம் நடைபெற உள்ளது.

இதுகுறித்து ஜவாகா்லால் நேரு கோளரங்கம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

பெங்களூரு, ஹைகிரவுண்ட்ஸ், டி.சௌடையா சாலையில் அமைந்துள்ள ஜவாகா்லால் நேரு கோளரங்கத்தில் ஜன. 16 முதல் 17-ஆம் தேதி வரையில் தினமும் மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை அறிவியல் பயிலரங்கம் நடைபெற உள்ளது. ‘வகுப்பறையில் பிரபஞ்சம்’ என்ற தலைப்பில் நடைபெற உள்ள இந்தப் பயிலரங்கத்தில், கணிதம், அறிவியலில் அதீத ஈடுபாடுள்ள 13 வயதுக்கு மேற்பட்டோா் கலந்துகொள்ளலாம். 30 போ் மட்டுமே அனுமதிக்கப்படும் இந்தப் பயிலரங்கில் பங்கேற்க ரூ. 350 கட்டணம் செலுத்தி முன்பதிவு செய்ய வேண்டும்.

Advertisement

Advertisement

மேலும் விவரங்களுக்கு ஜ்ஜ்ஜ்.ற்ஹழ்ஹப்ஹஹ்ஹ.ா்ழ்ஞ் என்ற இணையதளம் அல்லது 080-22379725 என்ற தொலைபேசி எண்ணை அணுகலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments