வர்த்தகம்

ஜனவரி முதல் ஹீரோ பைக்குகள் விலை உயர்வு

DIN

மோட்டார் சைக்கிள்கள் விலையை வரும் ஜனவரி மாதம் முதல் உயர்த்தவுள்ளதாக ஹீரோ மோட்டோகார்ப் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
இதுகுறித்து அந்த நிறுவனம் மேலும் கூறியுள்ளதாவது:
நிறுவனத்தின் இடுபொருள் செலவினம் கணிசமான அளவுக்கு அதிகரித்துள்ளது. அதன் காரணமாக, மோட்டார் சைக்கிள்களின் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. வரும் ஜனவரி மாதம் முதல் மோட்டார் சைக்கிளின் விலை மாடலுக்கு ரூ.400 வரை அதிகரிக்கும். எனினும், மாடலுக்கு ஏற்ப இந்த விலை உயர்வில் சிறிது மாறுபாடு இருக்கலாம் என்று ஹீரோ மோட்டோகார்ப் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஹுண்டாய், நிஸான், மஹிந்திரா & மஹிந்திரா, மாருதி சுஸுகி இந்தியா ஆகிய நிறுவனங்கள் வாகனங்களின் விலையை அடுத்த ஆண்டு முதல் உயர்த்தவுள்ளதாக ஏற்கெனவே அறிவித்து விட்டன. 
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், குறைந்த பட்சம் ரூ.42,432 (ஹெச்எப் டீலக்ஸ்) முதல் அதிகபட்சம் ரூ.1.10 லட்சம் வரையிலான (கரிஷ்மா இசட்எம்ஆர்) மோட்டார் சைக்கிள்களை விற்பனை செய்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பார்பி’ ஆண்டிரியா!

தங்கம் விலை அதிரடியாக பவுனுக்கு ரூ.920 குறைவு!

விருதுநகர் அருகே கல்குவாரியில் வெடிவிபத்து: 3 பேர் பலி

அதிக வருவாய் ஈட்டும் முதல் 10 ரயில் நிலையங்களில் தமிழ்நாடு முதலிடம்: தெற்கு ரயில்வே

கொலம்பியா பல்கலை. அரங்கைக் கைப்பற்றிய மாணவர்கள் கைது!

SCROLL FOR NEXT