வர்த்தகம்

மஹிந்திராவின் புதிய வாகனங்கள் அறிமுகம்

DIN

மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் 3 வகையான புதிய சரக்கு வாகனங்களை சென்னையில் வியாழக்கிழமை அறிமுகம் செய்தது.
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் (ஆட்டோமோட்டிவ்) தலைவரும், முதன்மை செயல் அதிகாரியுமான பிரவீண் ஷா தெரிவித்ததாவது:
மஹிந்திரா நிறுவனம் வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ற வகையில், பயணிகள் வாகனப் பிரிவில் 4 புதிய தயாரிப்புகளையும், சரக்கு வாகனப் பிரிவில் 3 புதிய தயாரிப்புகளையும் அறிமுகப்படுத்தியுள்ளது.
இதையடுத்து மஹிந்திராவின் "சுப்ரோ' தளத்தில் மொத்தம் 11 வகையான புதிய வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
பயணிகள் பிரிவில் சுப்ரோ மினி வேனின் விலை ரூ.4.62 லட்சத்திலிருந்து ஆரம்பமாகிறது. அதே போன்று சரக்கு வாகன பிரிவில் சுப்ரோ மினி லாரிகளின் விலை ரூ.4.34 லட்சத்திலிருந்து தொடங்குகிறது.
இந்த வாகனங்கள் அனைத்தும் மகாராஷ்டிரத்தில் உள்ள சாக்கண் ஆலையில் உருவாக்கப்பட்டவை.
சரக்கு வாகனப் பிரிவில் 3.5 டன் பிரிவில் மஹிந்திரா நிறுவனம் 51 சதவீத சந்தைப் பங்களிப்பைக் கொண்டு முதலிடத்தில் உள்ளது என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ட்ரெண்டி உடையில் ஷ்ரத்தா தாஸ் - புகைப்படங்கள்

மொரீஷியஸில் யுவனுடன் இளையராஜா!

காஸாவில் தொடரும் உணவுப் பஞ்சம்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

அரவிந்த் கேஜரிவால் வழக்கு: மே 7-க்கு ஒத்திவைப்பு

மும்பை பந்துவீச்சு; அணியில் முகமது நபி இல்லை!

SCROLL FOR NEXT